-
சர்ச்சில் கேப்பிடல் நிறுவனத்தைக் கைப்பற்றுமா பைஜுஸ் !
இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ், சர்ச்சில் கேபிட்டலை கையகப்படுத்தும் விவாதங்களில் ஈடுபட்டுள்ளது என்று இது குறித்து நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ், இன்னும் பல சாத்தியமான நிறுவனங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜனவரியில் அறிவிப்பு வரலாம் என்றாலும், பேச்சுவார்த்தை இறுதியானது அல்ல என்றும் பைஜூஸ் அல்லது சர்ச்சில் நிறுவனம் அத்தகைய ஒப்பந்தத்திலிருந்து விலகலாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் பைஜூஸ்…