Tag: Tata Groups

  • விஸ்தாரா-ஏர் இந்தியா இணைக்கும் முயற்சி தீவிரம்

    டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை இணைக்கும் பணிகளில் டாடா குழுமம் அதீத முயற்சி செய்து வருகிறது. தற்போது இண்டிகோ நிறுவனம் இந்திய அளவில் முன்னோடி நிறுவனமாக உள்ளது. இந்த சூழலில் இண்டிகோ நிறுவனத்துடன் போட்டி போடும் டாடா நிறுவனம், அதன் ஏர் இந்தியா நிறுவனத்தையும், விஸ்தாரா நிறுவனத்தையும் நிர்வாக ரீதியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விஸ்தாரா நிறுவனத்தில் 25 விழுக்காடு பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது.…

  • டாடாவின் தந்திரம்…

    டாடா குழுமத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன இவற்றில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட 15 நிறுவனங்களை மட்டும் பட்டியலிட அந்த குழுமம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக மொத்தம் 29 நிறுவனங்களை பட்டியலிட்டு முதலீடுகளை ஈர்க்க அந்த குழுமம் திட்டமிட்டது ஆனால் தற்போது அந்த முடிவை பாதியாக டாடா குழுமம் குறைத்துக்கொண்டுள்ளது. வியாபாரத்தில் நிலவும் போட்டியை சமாளிக்கவும், இருக்கும் நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அந்த குழுமத்தின்…

  • ஏர் இந்தியாவின் திட்டம்…

    அரசு வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அண்மையில் கைமாறிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியா நிறுவன சிஇஓ கேம்ப்பெல் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது உள்நாட்டு சந்தையில் டாடா குழுமத்தின் விமானங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 30 விழுக்காடு ஆதிக்கம் செலுத்த முடிவு எட்டப்பட்டது. விமான போக்குவரத்துத்துறையில் ஏர் இந்தியா நிறுவனம், தற்போது 3 பிரிவுகளை கொண்டு விமான சேவையை அளித்து வருகிறது. இந்தியாவில் இன்டிகோ…

  • ஏர் இந்தியாவுக்காக 4 பில்லியன் டாலர் நிதி திரட்டும் டாடா-சன்ஸ்

    இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான நிறுவனத்தை நவீனப்படுத்தவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தமாக 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 4 பில்லியன் டாலர் நிதியை ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் வகையில் திரட்ட…

  • டாட்டா எல்க்ஸியின் பங்குகள் 13 % உயர்வு !

    புதன்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் டாடா எல்க்ஸியின் பங்குகள் BSE இல் 13 சதவிகிதம் உயர்ந்து ரூ.7,171 என்ற புதிய உயர்வை எட்டியது. டிசம்பர் காலாண்டில் வரிக்குப் பின் (PAT) வளர்ச்சி 43.5 சதவீதம் என்று நிறுவனம் கூறியுள்ளது. டாடா எல்க்ஸி, டாடா குரூப் நிறுவனமானது, போக்குவரத்து, ஊடகம், தகவல் தொடர்பு மற்றும் சுகாதாரம் மற்றும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட தொழில்களில் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமாகும். Q3FY22க்கான செயல்பாடுகளின் மூலம் ₨…

  • TCS – காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும்?

    டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), அதன் டிசம்பர் காலாண்டு (Q3FY22) முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, அதனுடன் பங்கு திரும்பப் பெறுவதற்கான திட்டத்தையும் பரிசீலிக்க உள்ளது. சராசரியாக, டாடா குழும நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,200 கோடி. வருவாயில் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்வால் தொடர்ச்சியாக 2.5 சதவீதம் உயரலாம் கணிக்கப்படுகிறது. மூன்றாம் காலாண்டு நிதியாண்டு 21ன் போது, நிறுவனம் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.8,701 கோடியாகவும், வருவாய் ரூ.42,015 கோடியாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டின் முந்தைய…

  • TCS பங்குகள் திடீர் உயர்வு ! “பை பேக்” அறிவிப்பு எதிரொலி !

    டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பங்குகள் இன்று சந்தையில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.பி.எஸ்.இ.யில் பங்கு 3.24 சதவீதம் உயர்ந்து ₹3,979.90 ஆகவும், என்.எஸ்.இ.யில் இது 3.23 சதவீதம் உயர்ந்து ₹3,978 ஆகவும் இருந்தது. ஜனவரி 12, 2022 அன்று நடைபெறவுள்ள அதன் கூட்டத்தில், நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்குவதற்கான “பை பேக்” திட்டத்தை இயக்குநர்கள் குழு பரிசீலிக்கும்” என்று நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. பை பேக் பற்றிய வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

  • டிஜிட்டல் வணிகத்தில் $ 2.5 பில்லியன் திரட்ட டாடா குழுமம் திட்டம் !

    டாடா குழுமம், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ஆங்கர் முதலீட்டாளராக வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. காஃபியிலிருந்து கார்வரை விற்கும் டாடா குழுமமானது முழு அளவிலான நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதலீட்டாளர்களை இறுதி செய்யும் நம்பிக்கையில் இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனம், பிக் டெக் நிறுவனங்களில் ஸ்கூப் செய்து அல்லது முதலீடுகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது…

  • டாடா வின் அசத்தல் பிளான்! – ஏர் இந்தியாவுடன் இணையும் டிசிஎஸ்!

    இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா 60,000 கோடி ரூபாய் அளவிலான கடனில் இயங்கி வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஏர் இந்தியாவின் ஏலத்தில் டாடா சன்ஸ் குழுமத்திற்கு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டாடா சன்ஸ் அறிவித்துள்ள 18,000 கோடியில் 2,700 கோடி ரூபாய் நேரடியாகப் பணமாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. மீதமுள்ள 15,300 கோடி ரூபாயைக் கடனாக வங்கிகளில் பெற்று டாடா சன்ஸ் அரசுக்கு…

  • ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது டாடா நிறுவனம் !

    ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தால் அரசு கடும் இழப்பைச் சந்தித்து வந்தது. ஒவ்வொரு நாளும் ஏர் இந்தியாவை நடத்த அரசுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதனால் இந்நிறுவனம் ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டது. பெரும் நஷ்டத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே…