-
பாதி பேருக்கு வேலை இல்லை!!!!
உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையின் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி பிரமாற்ற நிறுவனமான வாசிர்எக்ஸ் நிறுவனம் தனது 40 % பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிறுவன பணியாளர்களுக்கு 45 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து அந்த நிறுவனம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. பொருளாதார மந்த நிலையால் இந்தியாவில் கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு அதிக வரி,வங்கிக்கணக்கை அனுகுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்கள்…
-
வரியை குறைத்தது அரசு….
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை லிட்டருக்கு 10 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த புதிய விலை அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. கச்சா எண்ணெய்க்கான விலையும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் கச்சா எண்ணெய்க்கான விலையாக 10ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது இது இனி 8 ஆயிரம் ரூபாயாக குறையும். சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதை அடுத்து இந்த வரியை மத்திய…
-
“டிசம்பர் வரை 15% ஏற்றுமதி வரி இருக்கும்”
தயார் நிலையில் உள்ள ஸ்டீல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் மத்திய அரசு 15 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்தது. இந்த வரி விகிதம் வரும் டிசம்பர் மாதம் வரை தொடர வேண்டும் என்று மத்திய அரசின் ஸ்டீல் பொருட்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. திடீரென வரியை குறைத்தால் உள்நாட்டு சந்தையில் விற்பனை வீழ்ச்சியடைந்து ஏற்றுமதியில் அதிக கவனம் செல்லும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது நடப்பாண்டு மழைக்காலத்திற்கு பிறகு உள்நாட்டு…
-
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல: நிதியமைச்சர் சீதாராமன் !!!
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த கட்டணம் விதிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். முன்னதாக ஒரு ட்வீட்டில், UPI சேவைகளுக்கு எந்தவிதமான கட்டணங்களையும் விதிக்க அரசாங்கத்தில் எந்தப் பரிசீலனையும் இல்லை. செலவுகளை சேவை வழங்குநர்கள் மற்ற வழிகளில் சரி செய்ய வேண்டும்” என்று…
-
திருத்தப்பட்ட நிதியாண்டு மதிப்பீடு.. நேரடி வரி வசூல் 48% உயர்வு..!!
மத்திய நேரடி வரிகள் வாரியம் 13.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது, இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளான 12.5 லட்சம் கோடியை விட 9% அதிகமாகும் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவு தெரிவித்துள்ளது.
-
டெலிகாம் துறை எவ்வாறு நலிவடைந்துள்ளது? சம்பாதிக்கும் ₹100ல், 35% அரசு வரி மட்டும்! ஏர்டெல் தலைவர்: சுனில் மிட்டல்.
பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் “தொலைத்தொடர்பு துறைக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அரசு வரிகள் மிக அதிகமாக உள்ளன” என்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். வரிச்சுமை முதலீட்டாளர் அழைப்பு விழாவொன்றில் பேசிய மிட்டல், சம்பாதிக்கும் ₹ 100-ல் ₹ 35 அரசுக்கு வரியாகச் செல்கிறது, ஏ.ஜி.ஆர் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமையை அதிகரிக்கின்றன என்றும், தொலைத்தொடர்புத் துறையின் சுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 5ஜி சேவை 5ஜி கொண்டுவருவது குறித்துக்…
-
போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வரை இருந்தால் வரி விலக்கு?