Tag: unemployment

  • யாருக்கெல்லாம் பணவீக்கம், வேலையின்மை பிடிக்கும்:பட்டியலிடுகிறார் ப.சிதம்பரம்

    முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதியுள்ள கட்டுரை அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த துறைகள் ஏழ்மையை பயன்படுத்திக்கொள்கின்றன என பட்டியலிட்டுள்ளார். அதன்படி வியாபாரம் செய்வோருக்கும், அரசாங்கத்தில் இருப்போருக்கும் வேலையின்மை பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். வேலைவாயப்பின்மை அதிகம் இருந்தால்தான் வேலைகளை தருவோர் பேரம் பேச வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார். 2021-2022-ல் விவசாயக்கூலித்தொழிலாளர்கள் வருவாய் வெறும் 3 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 2019ம் ஆண்டு நிலவரப்படி ஒரு விவசாயக்கூலித் தொழிலாளியின் குடும்பத்துக்கு சராசரி…

  • 2022 இல் உலகளாவிய வேலையின்மை 207 மில்லியனாக இருக்கும் – சர்வதேச தொழிலாளர் அமைப்பு !

    சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய வேலையின்மை 207 மில்லியனாக இருக்கும் என்று கணித்துள்ளது. இது 2019 ஐ விட கிட்டத்தட்ட 21 மில்லியன் அதிகமாகும் என்று அது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2022 இல் பணிபுரிந்த மொத்த மணிநேரம் அவர்களின் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு கிட்டத்தட்ட 2% அல்லது 52 மில்லியன் முழுநேர சமமான வேலைகள் பற்றாக்குறையாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • இந்தியாவின் இரண்டு வகைப் பொருளாதாரம் !

    இந்தியா பல ஆண்டுகளாக பொருளாதார இருமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் வகைப்படுத்தப் பட்டுள்ளது. பணக்காரன், ஏழை, நகரம் , கிராமம், படித்தவர், படிக்காதவர் என்று இப்படியான அடிப்படை பிளவு பொருளாதார இருமை வாதத்தின் பல பரிமாணங்களின் விளைவு ஆகும். காலப்போக்கில் மாறிக் கொண்டே இருப்பதால், பொருளாதார இருமைவாதம் வெளிப்படையாக பல பரிமாணங்களை கொண்டுள்ளது. வீட்டு உபயோகம் பற்றிய 2017-18ம் ஆண்டில் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் கசிந்த தகவல்கள் அடிப்படையில், கிராமப்புற…

  • வேலையின்மை, இந்தியாவின் தொடரும் துயரம் !

    வட இந்தியாவின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெருகி வரும் வேலையின்மை இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கிறது, இவற்றில், 8 மாநிலங்களில் வேலையின்மை இரட்டை இலக்க விகிதத்தை எட்டியிருக்கிறது, கோவிட் பெருந்தொற்றால் முடங்கிப் போன பொருளாதார வளர்ச்சியின் சுமையை இது மேலும் அதிகரிப்பதாக இருக்கிறது. வேலையின்மை இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கும் மாநிலங்களின் வரிசையில் மிக உயர்ந்த பட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 21.6 %, இரண்டாமிடத்தில் ஹரியானா 20.3 %, மூன்றாமிடத்தில் ராஜஸ்தான் 17.9 %,…

  • காணாமல் போன வேலைவாய்ப்புகள் – ப.சிதம்பரம்

    விடுதலை பெற்ற இந்தியாவில் 1947 க்குப் பிறகு 10க்கு மேற்பட்டவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறதா? அர்த்தமற்ற கேள்வியாக இருக்கலாம், கேள்விக்கு விடை “ஆம்” என்பதுதான். 2013-14 க்குப் பிறகு என்று எடுத்துக்கொண்டாலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. போர், பஞ்சம் அல்லது இயற்கைப் பேரழிவுகளால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டால் ஒழிய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை, இயல்பான சூழலில் ஒரு கடற்பயணம் மேற்கொள்ளும் கப்பலில் உறுதியான பற்சக்கரங்கள் இல்லையென்றாலும் அது முன்னோக்கி நகரும் என்பதுதான் உண்மை. உண்மையான கேள்வி…

  • நகர்ப்புற ஆண்களின் வேலையின்மையை கிராமப்புற பெண்கள் ஈடுகட்டுகிறார்கள்: சமீபத்திய கணக்கெடுப்பு