-
2021 இல் யூனிகார்ன் எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்த இந்தியா !
இந்திய நிறுவனங்களுக்கு சென்ற ஆண்டு நல்ல துவக்கமாக அமைந்தது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரட்டிய நிறுவனங்களை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். கோவிட் சூழலிலும் 33 இந்திய நிறுவனங்கள் யூனிகார்னுக்குள் நுழைந்தன. இத்துடன் சேர்த்து மொத்தம் 54 நிறுவனங்கள் யூனிகார்னில் இருக்கின்றன என்றும் உலகளாவிய அளவில் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இப்போது இந்தியா உள்ளதாக ஹாருனின் உலகளாவிய யூனிகார்ன் இண்டெக்ஸ் தெரிவிக்கின்றது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் 21 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.…
-
மூன்று பிட்னெஸ் நிறுவனங்களை வாங்கிய “கல்ட்-பிட்” நிறுவனம்!
உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த சேவைகளை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான கல்ட் பிட், ஹோம் கார்டியோ எக்கியூப்மென்ட் பிராண்டுகளான ஆர்.பி.எம் பிட்னெஸ், பிட்கிட் மற்றும் ஒன்பிட்பிளஸ் ஆகியவற்றை வாங்கி இருப்பதாக நேற்று அறிவித்திருக்கிறது. இந்த பிராண்டுகள் ஷோரா ரீடெய்லில் மோஹித் மாத்தூர் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டு சந்தையில் இயங்கியவை, இப்போது இந்த நிறுவனங்கள் அனைத்தும் வணிகத்தை மேலும் விரிவுபடுத்த கல்ட் பிட் உடன் இணைகின்றன. இதன் ஒருங்கிணைந்த மதிப்பானது சுமார் 20 மில்லியன் அமெரிக்க…
-
அதிர்ச்சியூட்டும் பேடிஎம் IPO சரிவு ! முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்கிறது?
பேடிஎம் பங்குகளின் அதிர்ச்சியூட்டும் இரண்டு நாள் சரிவானது, ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) விஷயத்தில் நாட்டின் வெற்றிகரமான பொருளாதார ஆண்டாக இருக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கி உள்ளது. பேடிஎம் இன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை முன்னெப்போதும் இல்லாத அளவு வாங்கிய சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு மதிப்புகள் இரண்டு வர்த்தக அமர்வுகளில் 35% க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் இறுதி விலையான…
-
இந்திய யூனிகார்ன்களுக்கு உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை – விவேக் கவுல்
நான் என் வாழ்க்கையில் 22 மாதங்களை வணிகப் பள்ளிகளில் வீணடித்திருக்கிறேன், குறைந்த அளவில் தான் அங்கே நிரந்தர ஆசிரியர்கள் இருந்தார்கள், புனே நகரின் எல்லா வணிகப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்கள் தான் இருந்தார்கள், அவர்கள் ஃபிரீலான்ஸ் முறையில் வேலை செய்தார்கள், வணிகப் பள்ளிகளின் செலவுகளைக் குறைக்க இது பெருமளவில் உதவியது. வணிக மாதிரிகளைப் பொறுத்தவரை, இது பரிதாபகரமானது, வணிகப் பள்ளியைத் துவங்கியவர்களுக்கு அவர்கள் செய்த மூலதனத்தை ஒப்பிட்டால் மிக உயர்ந்த வருமானம் இருந்தது, இத்தகைய கற்பித்தல் முறை…