Tag: wheat import

  • கோதுமை பற்றாக்குறை.. சப்பாத்தி விலை உயரலாம்

    இந்தியா ‘உலகிற்கு உணவளிக்க’ தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நான்கு மாதங்களுக்குள், அரசாங்கம் தானிய இறக்குமதியை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்திய உணவுக் கழகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கோதுமை பணவீக்கம் கிட்டத்தட்ட 12% மாக உள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலையில், தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களால், வெளிநாட்டில் இருந்து கோதுமையை வாங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும்…

  • இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும்

    இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். துருக்கிக்கு அனுப்பப்பட்ட தானியங்களில் ‘ருபெல்லா’ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலை நிராகரித்ததாகத் துருக்கி தெரிவித்தது, ஆனால் முதற்கட்ட விசாரணையில் ஐடிசி நிறுவனம் நெதர்லாந்துக்குத்தான் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது என்றும், அங்கிருந்து பின்னர் துருக்கிக்கு தானியங்களை நெதர்லாந்து ஏற்றுமதி செய்துள்ளது என்று தெரிய வந்ததாக பியூஷ் கோயல் கூறினார். கோதுமை ஏற்றுமதி நேரடியாக துருக்கிக்கு…