-
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல்…
வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றும் பணியை பாரின் எக்ஸ்சேஞ்ஜ் தளங்கள் செய்து வருகின்றன. முழுவதும் மின்னணு மயமான நிலையில் வகைதொகையில்லாமல் நிறுவனங்கள் புதிது புதிதாக இந்த பரிவர்த்தனைகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் தங்களிடம் பதிவு செய்யாத மோசடி ஏற்படுத்தும் வகையில் உள்ள 34 நிறுவனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. Etp எனப்படும் இவ்வகை பரிவர்த்தனை தளங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் ரசிர்வ் வங்கி எச்சரித்துள்ளது. Fema எனப்படும் வெளிநாட்டு…
-
“ஒரு நாள் மழையால 255 கோடி ரூபாய் நஷ்டம்”…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 30ம் தேதி பெரிய மழை கொட்டித் தீர்த்த்து. இதனால் பிரதான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள அவுட்டர் ரிங் ரோடு பகுதி திக்குமுக்காடியது. மோசமான வடிகால் வசதிகளால் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வைத்திருப்போர் சங்கம் ஒரு கடிதத்தை முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் அளித்தனர். அதில் கடந்த 30ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்…
-
எப்படி முடிந்தது சந்தை?
இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் நிறைவில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டின் நிஃப்டி 31 புள்ளிகள் சரிந்தும், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும், வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வர்த்தகத்தின் முடிவில் டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தனர். அதேபோல் ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனங்கள் உயர்வுடன் இருந்தன. இன்றைய நிலவரம் படி நிஃப்டி 17,624 புள்ளிகள்…
-
பங்குதாரர்களுக்கு நூதனமாக நன்றி தெரிவித்த இந்திய நிறுவனம்
மெட்ரோ பிரான்ட்ஸ் என்ற நிறுவனம் காலணிகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்தாண்டு டிசம்பரில்தான் பங்குச்சந்தையில் அறிமுகமாகியது. இந்த நிறுவனம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த பங்குகளை விற்று முதலீடுகளை ஈட்டி காலணி வியாபாரத்தை ஜோராக செய்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் அந்த நிறுவனம், தங்கள் பங்குதார்ர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தங்கள் நிறுவனப் பொருட்களில் 15 விழுக்காடு தள்ளுபடி அளிப்பதாக கூறியுள்ளது. மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் காலணிகள், பெல்ட் உள்ளிட்டவற்றை பங்குதார ர்கள் வாங்கிக்கொள்ளலாம்,…
-
கடுமை காட்டும் ஐடி நிறுவனங்கள்
கொரோனா பெருந்தொற்றால் வீட்டிலேயே இருந்து பழகிய ஐடி ஊழியர்களுக்கு இது சற்று கசப்பான தகவல்தான்.., பெருந்தொற்று நேரத்தில் வகைதொகை இல்லாமல் ஆட்களை எடுத்துவிட்டோம் என பெரிய நிறுவனங்கள் வருத்தப்படுவதாக ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை, சலுகைகள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழல் மாறிப்போய் தற்போது கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல அலுவலகம் வர ஆரம்பித்துள்ளனர். இதனால்…
-
கார் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ஜப்பானிய வங்கி முதலீடு?
2016ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனம் கோ மெக்கானிக் . பெரிய நிறுவனங்களின் தரத்தில் கார்களுக்கு பழுதுநீக்கும் பணியை, முன்னணி நிறுவனங்களை விட 40 விழுக்காடு குறைவான பணத்தில் சேவை வழங்கி வந்த இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் பிரபலமைடந்த்து. இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் என்ற நிறுவனம் கோ மெக்கானிக்கிடம் கடந்த 9 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அதிக தொகை கொடுத்து கடந்தாண்டு முதலீடு செய்து சாஃப்ட் பேங்க்…
-
2-வது நாளிலும் அசத்திய தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கி பங்குகள்
தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.., இந்த வங்கி தனது ஆரம்ப பங்குகள் சலுகைகளை வெளியிட்டது. கடந்த திங்கட்கிழமை மந்தமாக சென்ற பங்கு விற்பனை, முதல் நாள் முடிவில் 83 விழுக்காடு விற்றது. இரண்டாவது நாளாக நடந்த விற்பனையில் மொத்த பங்குகளையும் மக்கள் அர்வத்துடன் வாங்கிச்சென்றனர். 1.18 மடங்கு இந்த பங்குகளுக்கு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த வங்கியின் பங்குகள் வரும் 15-ம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளது. ஒரு பங்கின்…
-
ஏர் இந்தியாவுக்காக 4 பில்லியன் டாலர் நிதி திரட்டும் டாடா-சன்ஸ்
இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான நிறுவனத்தை நவீனப்படுத்தவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தமாக 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 4 பில்லியன் டாலர் நிதியை ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் வகையில் திரட்ட…
-
காலேஜ் பக்கம் திரும்பும் ஐடி நிறுவனங்கள்…
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் தற்போது வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஐடி துறை பணிகளை செய்யும் ஊழியர்கள் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு அதிக ஊதியம் தரவேண்டியுள்ளதாகவும் பெரிய நிறுவனங்களே புலம்புகின்றனர். இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வீயூக்கள் அதிகப்படுத்த முயற்சித்து வருகின்றனர். முன்னணி நிறுவனமான காக்னிசண்டில் மட்டும் நடப்பாண்டில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் உரிய ஆட்கள் கிடைக்காமல் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆட்களை தேர்வு…
-
சந்தை இன்று எப்படி தொடங்கியது?
இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17 ஆயிரத்து 550 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வாகனத் துறை பங்குகளில் சுமார் ஒரு சதவீதம் அளவிற்கு சரிவு காணப்படுகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடன்…