2-வது நாளிலும் அசத்திய தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கி பங்குகள்


தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.., இந்த வங்கி தனது ஆரம்ப பங்குகள் சலுகைகளை வெளியிட்டது. கடந்த திங்கட்கிழமை மந்தமாக சென்ற பங்கு விற்பனை, முதல் நாள் முடிவில் 83 விழுக்காடு விற்றது. இரண்டாவது நாளாக நடந்த விற்பனையில் மொத்த பங்குகளையும் மக்கள் அர்வத்துடன் வாங்கிச்சென்றனர். 1.18 மடங்கு இந்த பங்குகளுக்கு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த வங்கியின் பங்குகள் வரும் 15-ம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளது. ஒரு பங்கின் மதிப்பு 500 முதல் 525 ரூபாயாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..ஒரு கோடியே 58 லட்சம் பங்குகள் மூலம சுமார் 831.6 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்டுள்ளது. 2020-22 வரையிலான நிதியாண்டுகளில் அந்த நிறுவனத்தின் மொத்த நிகர வளர்ச்சி 5 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. 3 நாட்கள் நடக்கும் பங்கு விற்பனை இன்றுடன் நிறைவடைய உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *