-
வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பு
Ficci மற்றும் இந்திய வங்கி கூட்டமைப்பு இணைந்து அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின . அதில், வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடன்கள் வாராக்கடன் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ளது. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள், விமானத்துறை, சுற்றுலா துறைக்கும் பாதிப்பு அதிகம் உள்ளது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரை இந்த கருத்துகள் கேட்க பட்டன .பல வங்கிகளின் சொத்து மதிப்பு உயர்ந்தாலும் .வாராக்கடனும் உயர்வதால் அடுத்த கட்ட நடவடிக்கை…
-
இலங்கையில் பெட்ரோல் விற்க ஆர்வம் காட்டும் 24 நிறுவனங்கள்
இலங்கையில் பெட்ரோல் விற்பனை செய்வது பற்றி அந்நாட்டு ஆற்றல்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த மாதத்தில் விருப்பம் உள்ள நிறுவனக் கட்டமைப்பு குறித்து தெரிவிக்க இலங்கை ஆற்றல் துறை கூறி இருந்தது. இந்த சூழலில் அதனை பரிசீலிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 6 வாரங்களில் இறுதி முடிவு எடுக்க…
-
உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி
ப்ளூம் பெர்க் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆசியாவில் இருந்து ஒருவர் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும். கடந்த மாதம் 4 ம் இடத்தில் இருந்த கவுதம் அதானி, பிரான்ஸ் நாட்டின் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னார்டு வை இந்த மாதம் அதானி முந்தியுள்ளார். கவுதம் அதானி யின் சொத்து மதிப்பு 137பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது. முதல்…
-
நியூ டெல்லி டெலிவிஷன் – எந்த தடையும் இல்லை
அதானி குழுமத்திற்கு, நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV) லிமிடெட்டின் விளம்பர நிறுவனமான RRPR ஹோல்டிங் லிமிடெட், நேரடியாக பங்குகளை வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று செபியின் ’உள்ளக ஆலோசனை’ முடிவு செய்துள்ளது. இது என்டிடிவியின் கட்டுப்பாட்டிற்கான அதன் போரில் கெளதம் அதானி குழுமத்திற்கும், விளம்பரதாரர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோருடனான செபியின் நிலைப்பாட்டை எளிதாக்கும்., கடன் ஒப்பந்தங்கள், அதன் உத்தரவுகள், செக்யூரிட்டிஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (SAT) உத்தரவுகள் மற்றும் NDTV மற்றும் அதன்…
-
தரவு மீறலுக்கு ஆளாகியுள்ள வோடபோன் வாடிக்கையாளர்கள்
வோடபோன் ஐடியாவின் சுமார் 20 மில்லியன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள், தரவு மீறலுக்கு ஆளாகியுள்ளனர் என்று சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான CyberX9 தெரிவித்துள்ளது. இதுகுறித்து CyberX9 வெளியிட்ட அறிக்கையொன்றில், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் அழைப்பு நேரம், வாடிக்கையாளரின் பெயர் மற்றும் முகவரி, SMS உள்ளிட்ட விவரங்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலை Vi நிறுவனம் மறுத்துவிட்டது. வாடிக்கையாளர் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது என்று Vi தெரிவித்தது.
-
தீபாவளி முதல் சென்னையில் 5ஜி சேவை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45ம் ஆண்டு பொதுக்கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, வரும் ஆண்டு தீபாவளிக்கு சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் 5க் பிராட்பேண்ட் சேவை நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார். 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். இதற்காக 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அனைவரும் 5ஜி சேவை…
-
ரயில் பயணத்தின்போது உணவை டெலிவரி செய்யும் முறை
ரயில் பயணத்தின்போது அமர்ந்திருக்கும் சீட்டுக்கே உணவை டெலிவரி செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது. Zoop என்ற இந்த வசதியை பெற 70420- 62070 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் உணவு ஆர்டர் குறித்து மெசேஜ் அனுப்ப வேண்டும். முதலில் 10 இலக்க PNR எண்ணை அளித்ததும் பெயர் விவரம் சரிபார்க்க படும் அடுத்த ஸ்டேஷனில் என்ன உணவு கிடைக்கும் என்ற தகவல் வாட்ஸ் ஆப்பிலேயே கிடைக்கும்.உணவுக்கான பணத்தை வாட்ஸ் ஆப்பிலேயே செலுத்திக்கொள்ளலாம் . உணவுப்பொருள் வாங்க வேறு…
-
10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்களை அமைக்கிறது அதானி குழுமம்
அதானி குழுமமும் அமெரிக்க நிறுவனமான connex நிறுவனமும் இணைந்து இந்தியாவில் data centres எனப்படும் தரவு மையங்களை அமைக்க உள்ளன. இவ்வகை தரவு மையங்கள் இயங்க தேவைப்படும் மின்சார அளவை வைத்து வகை படுத்த படுகிறது. தற்போது இந்தியாவில் 550மெகாவாட் data centre மட்டுமே உள்ளன. இந்த சூழலில் அடுத்த 10ஆண்டுகளில் ஆயிரம் மெகாவாட் தரவு மையங்கள் அமைக்க பணிகள் நடப்பதாக அதானி connex நிறுவன துணைத்தலைவர் சஞ்சய் புதானி அறிவித்துள்ளார். இந்த மையங்கள் இந்தியாவில் சென்னை,…
-
நொய்டாவில் இரட்டை அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்டதில் 500 கோடி நஷ்டம்:சூப்பர் tech நிறுவனம்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 40மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இடிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதன்படி நேற்று வானுயர கட்டிடங்கள் 9 நொடிகளில் தகர்ந்தது. கட்டிட இடிப்புக்கு 3ஆயிரத்து 700கிலோ வெடிமருந்து பயன்படுத்தியது. இது தொட ர்பாக சூப்பர் tech நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கட்டிடத்தை இடிக்க 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறபடுகிறது. நேற்று த்கர்க்கப்பட்ட மொத்த மதிப்பு 700 கோடி ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதி…
-
தள்ளிப்போகும் NDTV வருடாந்திர பொதுக்கூட்டம்
இந்தியாவின் முதல் 24மணி நேரம் செய்தி சேனலாக பிரனாய் – ராதிகா ராய் தம்பதியால் தொடங்கப்பட்டது என்டி டிவி . தொடக்கத்தில் தூர் தர்ஷனுக்கு ஒப்பந்த அடிபபடையிலான சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது. தவிர்க்க முடியாத செய்தி சேனாலாக வளம் வரும் இந்நிறுவனத்தின் 29விழுக்காடு பங்குகளை அதானி குழுமம் அண்மையில் மறைமுகமாக வாங்கியது சர்ச்சை ஆனது. இந்நிலையில் மேலும் 26விழுக்காடு பங்குகளை வாங்க அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ndtv யின் 34வது ஆண்டு பொதுக்கூட்டம் வரும்…