-
EV பேட்டரி தீ விபத்து அச்சம் காரணமாக கவனம்
மின்சார இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் தீ விபத்து அச்சம் காரணமாக பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் EV பேட்டரிகளுக்கான புதிய தரநிலைகள் பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் நிலையில் உள்ளது. அதிக செயல்திறனை நோக்கி சந்தையை நகர்த்துவதற்கு இது ஒரு சரியான தருணம். எனவே, கொள்கை, பாதுகாப்பை மட்டும் பற்றி இருக்கக்கூடாது. தரநிலைப்படுத்தல் பேட்டரி ஸ்வாப்பிங் நெட்வொர்க்குகள் வெளிப்படுவதையும் செயல்படுத்த வேண்டும். பேட்டரி தொழில்நுட்பத்தில் குறைவான செலவே ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. லித்தியம் விலை…
-
பயனர் தரவுகளைப் பணமாக்க வாய்ப்பு
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) பயனர் தரவுகளைப் பணமாக்குவதற்கான சிந்தனையை உருவாக்கியுள்ளது. டெண்டர் ஆவணத்தின்படி, ஆய்வு செய்யப்படும் தரவுகளில் “பெயர், வயது, மொபைல் எண், பாலினம், முகவரி, மின்னஞ்சல், பயண வகுப்பு, பயணிகளின் எண்ணிக்கை, கட்டண முறை, உள்நுழைவு அல்லது கடவுச்சொல்”உள்ளிட்ட பிற விவரங்கள் உள்ளன. இது மிகவும் முக்கியமான தனிப்பட்ட தரவு. கடந்த கால அனுபவங்கள், வெகுஜன கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றன. தரவுப் பாதுகாப்புச் சட்டம்…
-
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் உரிமைகோரல்
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்திற்கு நிதிக் கடன் வழங்கிய 33 வங்கிகள் NCLT ல் ₹21,058 கோடி கடன்தொகைக்கு உரிமைகோரல்களைச் சமர்ப்பித்துள்ளனர், நியூயார்க் மெலோன் வங்கி, ₹4,670 கோடி, பேங்க் ஆப் பரோடா ₹2,286 கோடி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ₹2,002 கோடி, மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ₹1,657 கோடி என மிகப்பெரிய தொகைக்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) மும்பை பெஞ்ச், ஜூன் 20 அன்று, கடனில்…
-
விருந்து அரங்குகள், வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறை
வரி ஏய்ப்பைத் தடுக்க, மருத்துவமனைகள், விருந்து அரங்குகள், வணிக நிறுவனங்களில் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. ரொக்கமாக ரூ 20,000 அல்லது அதற்கு மேல் கடன் அல்லது வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது வருமான வரித் துறையின்படி தடைசெய்யப்பட்டுள்ளது, ஒரு நபர் மற்றொரு நபரிடமிருந்து ₹ 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மொத்தமாகப் பெற அனுமதிக்கப்படுவதில்லை. பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை அல்லது அரசியல் கட்சிக்கு பணமாக வழங்கப்படும் நன்கொடைகள் விலக்குகளாக அனுமதிக்கப்படாது. இந்த விதிகளை…
-
சந்தைகள் சரிய காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவு சந்திக்க தொடங்கி உள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் சரிவு ஏற்பட தொடங்கி உள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த 2 வர்த்தக நாட்களில் சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. அதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் ஒரு சதவிதத்திற்கு மேல் சரிந்துள்ளது. இந்த சரிவு மேலும் தொடருமா என்ற…
-
இரட்டிப்பாகியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.5 கோடிக்கு மேல் விலையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது. இது அடுக்குமாடி குடியிருப்பு விற்பனையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. 2022 இல் ஏழு நகரங்களில் விற்கப்பட்ட 184 லட்சம் யூனிட்களில், சுமார் 14 % (தோராயமாக 25,700 வீடுகள்) லக்ஸ்சூரி ஹோம்ஸ் பிரிவில் இருந்த போதிலும், 2.61 லட்சத்தில் விற்கப்பட்ட யூனிட்களில் வெறும் 7% (தோராயமாக 17,740 வீடுகள்) என்று தரவுகள் காட்டுகிறது. MMR (மும்பை பெருநகரப் பகுதி)…
-
கடுமையான மின்வெட்டால் பொருளாதார சிக்கல் – சீன
சீன நாட்டின் தென்மேற்கில் கடுமையான வெப்ப அலையால் ஏற்பட்டுள்ள மின்வெட்டால் பல பொருளாதார சிக்கல்களை சீனா எதிர்கொள்கிறது. இதன் காரணமாக, பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மின்சாரத்தைச் சேமிக்க தொழில்துறை உற்பத்தியை நிறுத்த சீன நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி, டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன், வோக்ஸ்வாகன் மற்றும் டெஸ்லாவின் பேட்டரி சப்ளையரான CATL ஆகியவற்றை இந்த முடிவு பாதிக்கும். ஏற்கனவே சோங்கிங் நகரம் வெறிச்சோடிப் போய் இருக்கிறது. சிச்சுவான் மாகாணமும்…
-
EV பேட்டரிகளை ஆய்வு செய்ய குழு
மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் மின்சார வாகன ( EV ) பேட்டரிகளுக்கான புதிய தரநிலைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வாகனங்கள் தீப்பிடித்ததைத் தொடர்ந்து EV பேட்டரிகளை ஆய்வு செய்ய அமைச்சகம் அமைத்த இரண்டு குழுக்களின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே தரநிலைகளின் வரைவை மின் வாகன தயாரிப்பாளர்களின் ஆலோசனைக்காக அனுப்பியுள்ளது,
-
வழக்கமான வருமான வரி சோதனை – Dolo 650 ஐ நிறுவனம்
அண்மையில் Dolo 650 ஐ தயாரிக்கும் நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ நிபுணர்களுக்கு இலவசங்களை வழங்க ₹1,000 கோடி செலவிட்டதாக கூறும் குற்றச்சாட்டுக்களிள் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து மைக்ரோ லேப்ஸ் மூத்த நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார். அவர் கூறுகையில், டோலோ 650 கடந்த 20 ஆண்டுகளாக பிராண்ட் லீடராக இருந்து வருகிறது. இந்த மில்லிகிராமில் இந்த மருந்தை அறிமுகப்படுத்தியதில் முதலில் சந்தையில்…
-
கோதுமை பற்றாக்குறை.. சப்பாத்தி விலை உயரலாம்
இந்தியா ‘உலகிற்கு உணவளிக்க’ தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நான்கு மாதங்களுக்குள், அரசாங்கம் தானிய இறக்குமதியை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்திய உணவுக் கழகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கோதுமை பணவீக்கம் கிட்டத்தட்ட 12% மாக உள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலையில், தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களால், வெளிநாட்டில் இருந்து கோதுமையை வாங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும்…