Category: சந்தைகள்

  • OYO பங்குச்சந்தைகளில் பட்டியலிட கொள்கையளவில் ஒப்புதல் – பூர்வாங்க ஆவணங்கள் தாக்கல்..!!

    78,430 கோடி ஆரம்ப பொதுப் பங்கு வழங்கலுக்கான (IPO) பூர்வாங்க ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.  7,000 கோடி வரையிலான பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் 1,430 கோடி வரையிலான விற்பனைக்கான சலுகை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) யில் தனது வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) தாக்கல் செய்தது.

  • 25/01/2022 – தொடர்ந்து சரியும் சந்தைகள் ! சென்செக்ஸ் 444 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

    இன்று காலை 11.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,982.46 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 332.88 புள்ளிகள் குறைந்து 57,158.63 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 147.55 புள்ளிகள் குறைந்து 17,001.55 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 349 புள்ளிகள் குறைந்து 36,598.05 ஆகவும் வர்த்தகமானது.

  • ஐசிஐசிஐ வங்கி – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !

    தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ, டிசம்பர் காலாண்டில் (Q3FY22) நிகர லாபத்தில் 25 சதவீதம் உயர்ந்து, ரூ. 6,194 கோடியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, இதுவரை இல்லாத காலாண்டு லாபமாகும். இதன் மூலமாக 5,800 கோடி நிகர லாபம் கிடைக்கும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் நிகர வட்டி வருமானம் கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.9,912 கோடியாக இருந்த நிலையில், 22ஆம் காலாண்டில் 23 சதவீதம் அதிகரித்து ரூ.12,236 கோடியாக உள்ளது.

  • 24/01/2022 – வீழ்ச்சியில் சந்தைகள் ! சென்செக்ஸ் 650 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

    24/01/2022 – வீழ்ச்சியில் சந்தைகள் ! சென்செக்ஸ் 650 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

  • “மல்டி பேக்கர்” SEL உற்பத்தி நிறுவனப் பங்குகளின் அசாத்திய லாபம் !

    இந்த காலகட்டத்தில் அதன் பங்குதாரர்களுக்கு சுமார் 21.50 சதவிகிதம் லாபம் ஈட்டியதுடன், பங்கின் விலையும் 250 மடங்கு உயர்ந்துள்ளது.SEL Manufacturing Company மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக்கில் ₹1 லட்சத்தை காலம் முழுவதும் முதலீட்டாளர் பங்குகளில் முதலீடு செய்திருந்தால், அதன் ₹1 லட்சம் இன்று ₹2.50 கோடியாக மாறியிருக்கும். .

  • அதிகரிக்கும் “ஹெல்த் இன்சூரன்ஸ்” விலை ! உங்கள் இன்சூரன்ஸில் “கோவிட் கவர்” இருக்கிறதா?

    ஒரு மருத்துவ நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம், கோவிட் பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் ஏறத்தாழ 60 லட்சம் உயிரிழிப்புகளை சந்தித்திருக்கிறது, சமூகப் பாதுகாப்பும், அரசு வழங்கும் நிவாரணங்களும் இருக்கும் வளர்ந்த பணக்கார நாடுகளில் உயிரிழப்பால் குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது எளிதானது, ஆனால், இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் இந்த காலகட்டத்தில் சந்திக்கும் இழப்புகளை ஈடுகட்ட முடியாமல், முறையான மருத்துவ வாய்ப்புகள் இல்லாமல் தங்கள்…

  • 19/01/2022 – வீழ்ச்சியில் சந்தைகள் ! சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

    19/01/2022 – வீழ்ச்சியில் சந்தைகள் ! சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

  • 2022-23 நிதியாண்டில் 50,000 மின் வாகனங்கள் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் இலக்கு !

    TPG கேபிட்டலின் பில்லியன் டாலர் நிதியுதவி மற்றும் புதிய அளவிலான மாடல்களின் ஆதரவுடன், டாடா மோட்டார்ஸ் 50,000 மின் வாகனங்களை ஏப்ரல் தொடங்கி அடுத்த நிதியாண்டில் உற்பத்தி செய்யும் திட்டத்துடன் உள்ளது, 2023 நிதியாண்டில் மின் வாகனங்களின் உற்பத்தித் திட்டத்தில் 50,000 விற்பனையாளர்களை டாடா நிறுவனம் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் 125,000-150,000 யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களின் வணிகமானது இலக்குகளை அடைந்தால், நிதியாண்டு 23 ல் டாடா மோட்டார்ஸுக்கு ரூ. 5,000…

  • உங்களிடம் என்ன இன்சூரன்ஸ் இருக்கிறது? யார் டெர்ம் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

    நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு…

  • 2022 தங்கப்பத்திரங்கள் (SGBs) வெளியீடு !

    2022 வருடத்தின் தங்கப் பத்திரங்கள் (SGBs) முதல் வெளியீடு திங்கள்கிழமை திறக்கப்பட்டது. சவரன் தங்கப் பத்திரங்கள் (SGB ) திட்டம் 2021-22- ஜனவரி 14 வரை சந்தாவிற்கு திறந்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி, பத்திரத்தின் பெயரளவு மதிப்பு ₹4,786 (ஒரு யூனிட் சவரன் தங்கம் 1 கிராம் தங்கத்திற்கு சமம்) என வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ₹50 தள்ளுபடி வழங்க இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளன. 2015…