-
12 பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ரூ.6,651 கோடி இடைக்கால ஈவுத்தொகை !
மத்திய அரசு, 12 பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து இடைக்கால ஈவுத்தொகையாக திங்களன்று ரூ.6,651 கோடியை பெற்றுள்ளது, இது நடப்பு நிதியாண்டில் ரூ.50,028 கோடி ஈவுத்தொகை இலக்கை எட்டியுள்ளது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (பிஜிசிஐஎல்) அரசுக்கு ஈவுத்தொகைத் தொகையாக ரூ. 2,506 கோடியை செலுத்தியுள்ளது, அதே நேரத்தில் என்எம்டிசி மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா முறையே ரூ.1,605 கோடி மற்றும் ரூ.972 கோடி இடைக்கால ஈவுத்தொகையாக செலுத்தியுள்ளன.
-
2022-23 நிதியாண்டில் 50,000 மின் வாகனங்கள் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் இலக்கு !
TPG கேபிட்டலின் பில்லியன் டாலர் நிதியுதவி மற்றும் புதிய அளவிலான மாடல்களின் ஆதரவுடன், டாடா மோட்டார்ஸ் 50,000 மின் வாகனங்களை ஏப்ரல் தொடங்கி அடுத்த நிதியாண்டில் உற்பத்தி செய்யும் திட்டத்துடன் உள்ளது, 2023 நிதியாண்டில் மின் வாகனங்களின் உற்பத்தித் திட்டத்தில் 50,000 விற்பனையாளர்களை டாடா நிறுவனம் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் 125,000-150,000 யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களின் வணிகமானது இலக்குகளை அடைந்தால், நிதியாண்டு 23 ல் டாடா மோட்டார்ஸுக்கு ரூ. 5,000…
-
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்டின் காலாண்டு முடிவுகள் – வியாழக்கிழமை வெளியாகிறது
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, தொழில்துறையின் போக்குகள் கிராமப்புறங்களின் தேவை குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான காரணங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன. ஆனால், பொருட்களின் தயாரிப்பு விலை அதிகரிப்பால் வருவாய் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
-
வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை இந்தியா எட்டும் – மத்திய அமைச்சர் ஃபியூஷ் கோயல் தகவல்
நடப்பு ஆண்டில், வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை எட்டும் பாதையில் இந்தியா செல்வதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் முதல் 250 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும். இது குறைவான இருந்தாலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிபிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மதுரை முதல் ஹல்டியா வரை – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.7000 கோடி முதலீடு !
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏலச் சுற்றில், நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), நகர எரிவாயு விநியோக நெட்வொர்க்குகளை அமைப்பதில் ரூ. 7,000 கோடி முதலீடு செய்யப்போவதாகக் கூறியது. ஜம்முவில் இருந்து மதுரை முதல் ஹல்டியா வரையிலான நகரங்களை வளைத்து எடுத்ததில், IOC 33 சதவீத தேவை திறனைப் பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
வெளிநாடு வாழ் (NRI) இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா?
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. NRI களுக்கு தனிநபர் நிறுவனங்களை (OPCs) அமைப்பதற்கான அனுமதியானது அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்கியது. மலிவு விலை வீடுகளுக்கான வரிச் சலுகைகளும் நீட்டிக்கப்பட்டது. பல நாடுகளால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிகளையும் அரசாங்கம் தளர்த்தியது, இது NRI கள் திட்டமிட்டதை விட நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தை…
-
எலான் மஸ்க்கின் டெஸ்லாவுக்கு நான்கு மாநிலங்கள் சிவப்புக் கம்பள வரவேற்பு !
டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி பெறுவதில் உள்ள சவால்களை எலான் மஸ்க் தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, இரண்டு மாநில அரசாங்கங்களிடமிருந்து வியக்கக்கூடிய சலுகைகளைப் பெற்றுள்ளார். ஜனவரி 13ந் தேதியன்று, எலன் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கான உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் நிறைய சவால்களைச் சந்தித்து வருவதாக ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து குறைந்தது நான்கு மூத்த அமைச்சர்கள்…
-
17/01/2022 – 61,000 புள்ளிகளுக்கு மேல் நிலையான சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்று காலை 10.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 61,269.18 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 3.38 புள்ளிகள் குறைந்து 61,219.64 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 20.09 புள்ளிகள் குறைந்து 18,235.65 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 157 புள்ளிகள் அதிகரித்து 38,212.55 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 61,219.64 61,223.03 (-) 3.38 (-) 0.005 NIFTY…
-
வங்கிகளுக்கான புதிய முதலீட்டு வகை சீரமைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு !
வங்கிகளுக்கான புதிய முதலீட்டு வகையான, லாபம் மற்றும் நஷ்டக் கணக்கின் மூலம் நியாயமான மதிப்பு, கடன் வழங்குபவர்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ விதிமுறைகளை உலகளாவிய கணக்கியல் தரநிலைகளுடன் சீரமைக்க இந்திய ரிசர்வ் வங்கி தனது ஆய்வறிக்கையில் முன்மொழிந்தது.முதிர்வு (HTM), விற்பனைக்குக் கிடைக்கும் (AFS) மற்றும் லாபம் மற்றும் நஷ்டக் கணக்கு (FVTPL) என்று வங்கிகளின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ இப்போது மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியது. முன்மொழியப்பட்ட விதிகளின்படி, தற்போதுள்ள ஹோல்டு ஃபார் டிரேடிங் (HFT)…
-
ஓயோ (OYO) – IPO வெளியாகுமா?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணத் தொழில்நுட்ப நிறுவனமான OYO தனது பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் ஹோட்டல் கூட்டாளிகளின் தொடர்ச்சியான திருப்தியும், அதிருப்தியில் இருக்கும் கூட்டாளர்களை அணைத்துக் கொண்டு செல்வதும் அதன் பங்குகளை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். சமீபத்தில் ஓயோ நிறுவனத்திற்கு எதிராக சில ஹோட்டல் கூட்டாளிகள் பகிரங்கமாக புகார் செய்தல், வழக்குகளை தாக்கல் செய்தல் மற்றும் கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் எழுதியதால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 1,57,000 கடைகளுடன், நிறுவனம் அல்லது அதன் இயக்குநர்களுக்கு எதிராக…