-
ஒரே ஆண்டில் வருமானத்தை இரட்டிப்பாக்கிய ஆப்பிள் இந்தியா !
ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் $ 3.3 பில்லியன்களை இந்தியாவில் ஈட்டி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆப்பிள் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்,” ஆப்பிள் நிறுவனம் இந்தியா மற்றும் வியட்நாமில் தனது விற்பனையை இரட்டிப்பாகி உள்ளது, இந்தியாவில் ஆப்பிள் இன்க் நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தையாக வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பார்க்கமுடியும். ஐபோன் 13 போன்ற…
-
இரண்டாகப் பிரியும் கோத்ரேஜ் நிறுவனம் !
இந்தியாவின் பாரம்பரியமான நிறுவனங்களில் ஒன்றான கோத்ரேஜ் நிறுவனம் இரண்டாகப் பிரிகிறது. இதற்கு இரு தரப்பும் சம்மதித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, 4.1 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புக் கொண்ட கோத்ரேஜ் குழுமத்தை ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் கோத்ரேஜ் ஒரு பக்கமும், அவரது நெருங்கிய உறவினர்களான ஜம்சத் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜும் பிரித்துக் கொள்கின்றனர் என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 124 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனம் பூட்டு தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது,…
-
டீ விற்பனையில் இருந்து வெளியேறும் டாடா !
டாடா குழுமம் தனது டீ விற்பனை நிலையங்களில் இருந்து வெளியேறுகிறது. இனி அதன் நுகர்வோர் தயாரிப்புகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் பெங்களூரில் 4 டீ விற்பனை நிலையங்களை சங்கிலித் தொடராக திறந்தது. அதற்கு “டாடா ச்சா” என்றும் பெயரிட்டது. யார் கண் பட்டதோ என்னவோ அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாகவே அதற்கு மூடு விழா நடத்தப்பட்டது, ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல…
-
நாளொன்றுக்கு ₹ 27 கோடி நன்கொடை வழங்கும் அசீம் பிரேம்ஜி !
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் தலைவர் அசீம் பிரேம்ஜி இந்திய மென்பொருள் துறையின் சக்கரவர்த்தி என்று போற்றப்படுகிறார். இவர் தொழிலதிபர் என்ற அடையாளத்தைத் தாண்டி சமூக மேம்பாடுகளுக்காக தொடர்ந்து பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு கொடை வள்ளல் என்றால் அது மிகையில்லை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ₹ 9,213 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறார், அதாவது நாள் ஒன்றுக்கு ₹ 27 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார் இவருக்கு அடுத்ததாக சமூக…
-
திவாலான சின்டெக்ஸ் நிறுவனத்தை வாங்க முகேஷ் அம்பானி உட்பட பலர் போட்டி !
பிரபல சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் தயாரிப்பு நிறுவனம், திவால் ஆனதை அடுத்து அதை வாங்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி உள்பட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த சின்டெக்ஸ் நிறுவனம், வாட்டர் டேங்க் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் முன்னிலையில் இருந்தது. ஹார்மனி , டீசல் மற்றும் பல பிராண்டுகளில் ஆடை விற்பனை மேற்கொண்டது. அதற்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் தவணை முடிந்தும் பணம் கட்டாததால் தங்கள் கடனை திருப்பி கேட்டன. இதனால் சின்டெக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிதி…
-
விதிமீறல்களுக்காக இ-காம் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் !
கடந்த ஓராண்டில் மட்டும் தங்கள் தயாரிப்புகளில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் சரிவர இல்லாததால் 217 பொருட்களுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் அதிகபட்சமாக மின்னணு சாதனங்கள். ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விதிமீறலுக்குள்ளானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நோட்டீசில் இருக்கும் 217 அறிவிப்புகளில், 202 பொருட்களின் மீது தயாரிக்கப்பட்ட இடத்தின் பெயர், காலாவதியான தேதி, மற்றும் இறக்குமதியாளர்கள் முகவரி இல்லாதது, எம்.ஆர்.பி யை விட அதிக விலைக்கு…
-
கோவாக்சின், உலகளாவிய பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெறுமா?
ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்க வேண்டுமென கடந்த ஏப்ரல் மாதம் கேட்டுக்கொண்டது, கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய உலக சுகாதார நிறுவன தொழில்நுட்பக் குழுவினர் “உலகளாவிய இந்த மருந்தின் பயன்பாட்டுக்கு மேலதிக விளக்கங்கள் வேண்டும், அதுவரை கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது” எனவும் கூறியது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாடு பட்டியலுக்கான கோவாக்சின் பற்றிய தரவை மதிப்பீடு செய்வதற்காக தொழில்நுட்பக்…
-
பிரதமர் மோடியை சந்திக்கிறார் எலான் மஸ்க் !
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க இருக்கிறார் என்றும், இந்த சந்திப்பின்போது டெஸ்லா கார் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மின்சார கார்களை தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமான டெஸ்லா தனது கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது, ஆனால், இந்தியாவில் மின்சாரக் கார்களின் இறக்குமதி வரி…