-
கடனில் தத்தளிக்கும் ஜெயப்பிரகாஷ் பவர் வென்சர்ஸை வாங்க அதானி திட்டம்
ஜெயபிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனம் அதீத கடன் சுமையால் தவித்து வருகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட நிறுவனத்தை 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கவும் குறிப்பாக சிமெண்ட் ஆலையை மொத்தமாக வாங்கவும் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்தான் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை அதானி குழுமம் கைப்பற்றியது மத்திய பிரதேசத்தில் உள்ள நிக்ரி பகுதியில் ஜெய்பிரகாஷ் அசோசியோட்ஸ்…
-
அமெரிக்காவில் கடன் விகிதம் உயர்வால் தொடரும் சிக்கல்
அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலையை சமாளிக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் அமெரிக்க பெடரல் ரசிர்வ் அனைத்து வகையான கடன்களின் மீதான வட்டிகளையும் கடுமையாக உயர்த்தி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கமும் குறைந்துள்ளது. சொந்த நாட்டிலேயே பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக அந்த நாட்டில் சர்ச்சை எழுந்தது. ஆகஸ்ட் மாதம் 3 லட்சத்து 15 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேரைத்…
-
டிஜிட்டல் ரூபாயை விரைவில் அறிமுகப்படுத்துகிறது ரிசர்வ் வங்கி
இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடையும் விதிக்கப்படவில்லை, அதை நிராகரிக்கவும் இல்லை, பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு அதீத வரியாக 30 விழுக்காடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிட்காயின்களுக்கு போட்டியாக இந்திய அரசின் கீழ் உள்ள ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது இந்த திட்டம் இந்தாண்டே தொடங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தெரிவிக்கிறார். ரொக்கப்பணத்துக்கு நிகரான வகையில் பாதுகாப்பு,நம்பிக்கை, உத்தரவாதம் தரும் வகையில் இந்த டிஜிட்டல் கரன்சிகள் இருக்கும் என்று…
-
இந்த விலைக்கு விற்றால் நானே வாங்க மாட்டேன்!!!!
என்னாலேயே உங்கள் நிறுவன காரை வாங்க முடியவில்லை என்று பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸை நிதின் கட்கரி கலாய்த்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார காரான EQS 580 4matic மின்சார காரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே அதிக கார்களை உற்பத்தி செய்தால்தான் விலையும் குறையும் என்றார் தாம் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தம்மால் இந்த…
-
டோக்கனைசேஷன் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்யும்?
ஆன்லைனில் பொருட்களை வாங்க தற்போது டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த வகை பரிவர்த்தனைகள் ஹேக்கர்கள் புகுந்துவிடுவதால் தோல்வியில் முடிவதுடன், பணத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. இந்த சூழலில் டோக்கனைசேஷன் என்ற புதிய முறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது இந்த வகை டோக்கன்கள் மூலம் உங்கள் 16 இலக்க எண் இனி ஒவ்வொரு முறையும் பதிவிட வேண்டிய அவசியம் இருக்காது.…
-
போதுமான கோதுமை கையிருப்பில் உள்ளது!!!
உள்ளூரில் அதிக கோதுமையை விநியோகிக்கும் வகையில் போதுமான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை செயலாளர் சுதன்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் சுமார் 24 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடப்பாண்டு ரபி பருவத்தில் மட்டும் 105 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை உற்பத்தி இருப்பதாகவும், சந்தைக்கு 95 முதல்…
-
ஜூம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!!!
கொரோனா காலகட்டத்தில் பல தரப்பினரும் தங்கள் அலுவலக மீட்டிங்களை ஜூம் செயலி மூலமே செய்து வந்தனர். இந்த நிலையில் அதில் உள்ள குறைபாடு குறித்து மத்தியஅரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்திய கணினி அவசரகால செயல்பாட்டு குழு என்ற அமைப்பு (CERT-IN) என்ற அமைப்புதான், இந்தியாவின் சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவுறுத்தல்களில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த அமைப்பு அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஜூம் செயலியில் பாதுகாப்பு குறைபாடு மிதமான வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.…
-
இதையும் விற்கலாம்னு இருக்கோம்.. யாருக்காவது வேணுமா?
கடன் சுமையில் சிக்கித்தவித்த ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு விற்க கடந்த 2016ம் ஆண்டே மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த வங்கியின் பங்குகளை விற்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அண்மையில் எல்ஐசியின் பங்குகள் விற்கப்பட்டதை போல அடுத்தபடியாக ஐடிபிஐ பங்குகள் விற்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கியும், ஐடிபிஐ வங்கியும் ஒப்பீட்டு அளவில் பார்த்தால், ஐசிஐசிஐ வங்கி பின்பற்றிய உத்திகள் சிறப்பாக இருந்துள்ளது. இந்நிலையில் ஐடிபிஐ வங்கிகளின் உரிமை தற்போது எல்ஐசி…
-
கவனமா இருங்க!!!
ஆன்டிராய்டு போன்களில் மொபைல் பேங்க்கிங் செயலியை குறிவைத்து புதிய வைரஸ் களமிறங்கியுள்ளது சோவா என்ற பெயரில் அமெரிக்கா, ரஷ்யா ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஒரு Trojan வகை வைரஸ் ஆன்டிராய்டு போன்களில் பரவியதுஇந்தியாவிலும் ஆன்டிராய்டு செல்போன்களில் புகுந்துவிட்ட இவ்வகை வைரஸ்கள் அவ்வளவு எளிதில் அழிக்க முடியாதபோலியான மற்றும் பாதுகாப்பு இல்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்யும்போது இந்த வைரஸ் ஆன்டிராய்டு செல்போன்களுக்குள் நுழைந்து விடுகிறது… ஆன்டிராய்டு செல்போனில் உள்ள வங்கி செயலிகளின் username,password களை இந்த வைரஸ் திருடிக்ககொ…
-
உலகின் 2-வது பணக்காரர் ஆனார் கவுதம் அதானி…
ஃபோர்ப்ஸ் அமைப்பு ரியல் டைம் பில்லியனர் என்ற பட்டியலை தயாரித்துள்ளது. இதில் இந்தியாவின் பெரும்பணக்காரர் கவுதம் அதானி உலகளவில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், 155.7 பில்லியன் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் பெருநிறுவமனை ஜெப் பெசூஸாசின் அமேசான் நிறுவனத்தை விட அதிகம் வருவாயை கொண்டுள்ளார் கவுதம் அதானி. இந்தாண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை…