Tag: banks

  • வங்கிக் கடன் மோசடி: “கார்வி” நிறுவனத் தலைவர் கைது!

    ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான “கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் லிமிடெட்” நிறுவனத் தலைவர் சி பார்த்தசாரதி வங்கிக் கடன் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். பார்த்தசாரதி, “இண்டஸ்இண்ட்” வங்கியின் மூலம் வாங்கிய கடன் தொகையை தன்னுடைய வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மடை மாற்றி இருப்பதாக காவல்துறை இணை ஆணையர் (புலனாய்வுத் துறை) அவினாஷ் மொஹந்தி தெரிவித்தார். “இண்டஸ்இண்ட்” வங்கி அளித்திருக்கும் புகாரில், கார்வி நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் பிணைகள் மற்றும் பங்குகளை உரியவர்களின்…

  • சந்தையின் புதிய ஏற்றங்களில் இன்சைட் டிரேடர்ஸின் பங்கு விற்பனை சூடு பிடிப்பது ஏன்?

    “இன்சைட் ட்ரேடர்ஸ்” என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விற்பனை ஜூன் மற்றும் மே மாதங்களில் தலா ₹7000 கோடியாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலைத் தாக்குதல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை திருத்தங்களுக்கு உட்பட்டது, இதன் காரணமாக “இன்சைட் ட்ரேடர்ஸ்” களின் விற்பனை ஓரளவு…

  • “சிட்டி பேங்க் – இந்தியா” யாருக்கு? – கடும் போட்டி!

    HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, சிங்கப்பூரின் DBS வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கிடையே சிட்டி பேங்க் – இந்தியாவின் வங்கி சில்லறை வணிகத்தை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கொண்ட இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது என்று “எக்கனாமிக் டைம்ஸ்” செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பல முனைப் போட்டியில் விரைவில் ஐந்து போட்டியாளர்களின் இருந்து மூன்று போட்டியாளர்களாகக்…

  • உங்கள் வங்கி திவாலாகி விட்டதா? போட்ட பணம் எல்லாம் போச்சா? இனி கவலை வேண்டாம்!