Tag: FMCG

  • உணவுப் பொருட்களை சேமிக்கும் விற்பனையாளர்கள் ! கோவிட் 3 ஆம் அலை அச்சம் !

    அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக்…

  • உணவக வணிகத்தில் தீவிரமாகும் டிக்டாக் !

    டிக்டாக் வீடியோ பகிர்வு தளமானது உணவக வணிகத்தில் இறங்குவதற்கான ஆயத்தங்களில் இருக்கிறது, டிசம்பர் 17 அன்று, வீடியோ-பகிர்வு தளமானது விர்ச்சுவல் டைனிங் கான்செப்ட்ஸுடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்தது, இது மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் டெலிவரிக்கு மட்டுமேயான டிக் டாக் கிச்சன் உணவகங்களைத் தொடங்கும். உணவு மற்றும் செய்முறை வீடியோக்கள் தளத்தின் நிரலாக்கத்தின் முக்கிய பகுதியாக மாறிவிட்டன, கிளிப்புகள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மாதாந்திரம் தனது தளத்தைப்…

  • ஐ.டி.சி யின் அடுத்த திட்டம் என்ன? நாளை தெரியும் !

    எஃப்எம்சிஜி மற்றும் ஹோட்டல் போன்ற வணிகங்களின் வளர்ச்சிக்கான அடுத்த கட்ட திட்டங்களை ஐடிசி நிர்வாகம் செவ்வாய்கிழமை வெளியிடும் என்று தெரிகிறது. ஹோட்டல்கள் அல்லது ஐடி வணிகத்தை பிரிப்பதை ஐடிசி அறிவிக்கலாம் என்று சந்தை ஊகங்கள் தெரிவித்தாலும், இந்த முன்மொழிவுகள் இன்னும் நிர்வாகக் குழுவுக்கு முன் வைக்கப்படவில்லை அல்லது அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதால் அது சாத்தியமில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி “இந்த வணிகங்களுக்கு “மாற்று கட்டமைப்புகளை” எவ்வாறு உருவாக்கலாம்…

  • மதர் ஸ்பார்ஷில் முதலீடு செய்யும் ஐடிசி !

    இந்தியாவில் விற்பனைத் துறையில் பிரபல நிறுவனமான ஐடிசி (ITC), மதர் ஸ்பார்ஷில் (MOTHER SPARSH) தாய் மற்றும் குழந்தை பராமரிப்புப் பிரிவில் முதலீடு செய்யும் என்று நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கிறது. நுகர்வோர் பிராண்டான மதர் ஸ்பார்ஷில் 16 சதவீத பங்குகளை ₹ 20 கோடிக்கு வாங்குவதாக, ஐடிசி வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஐடிசி கடந்த சில ஆண்டுகளாக சிகரெட் அல்லாத எஃப்எம்சிஜி வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறது. மதர் ஸ்பார்ஷ், அதன் சீரிஸ் A நிதிச் சுற்றில் திரட்டப்பட்ட நிதியை…

  • பதஞ்சலி “ருச்சி சோயா” வின் IPO !

    புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் இணை நிறுவனரான பதஞ்சலி நிறுவனத்தின் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செபி ஒப்புதல் பெற்று ஐபிஓ நிதி திரட்டலுக்குத் தயாராகி வருகிறது. ஐபிஓவின் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக இருக்கும். இந்த செயல்பாட்டு மூலதனம், தேவைகள் மற்றும் நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. பதஞ்சலி குழுமத்தின் ஒரு அங்கமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், இந்திய சமையல் எண்ணெய் துறையில் முன்னணி எஃப்எம்சிஜி பிராண்டுகளில் ஒன்றாகும். சோயா உணவு உற்பத்தியாளர்களில்…

  • டீ விற்பனையில் இருந்து வெளியேறும் டாடா !

    டாடா குழுமம் தனது டீ விற்பனை நிலையங்களில் இருந்து வெளியேறுகிறது. இனி அதன் நுகர்வோர் தயாரிப்புகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் பெங்களூரில் 4 டீ விற்பனை நிலையங்களை சங்கிலித் தொடராக திறந்தது. அதற்கு “டாடா ச்சா” என்றும் பெயரிட்டது. யார் கண் பட்டதோ என்னவோ அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாகவே அதற்கு மூடு விழா நடத்தப்பட்டது, ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல…