-
இனி எல்லாம் 1 மணி நேரத்தில் ….
வரும் 2047ம் ஆண்டு உலகளவில் சரக்கு கையாள்வதில் இந்தியா 10% என்ற அளவை எட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. இதையொட்டி துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வரும் சரக்குகளை , வந்த ஒரு மணி நேரத்துக்குள் வெளியேற்றும் முறைக்கான பணிகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.இந்த திட்டத்துக்கு கஸ்டம்ஸ் ஒன் என்று பெயரிடப்பட்டுள்ளது 2047ம் ஆண்டு இந்தியா நூறாம் ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாட உள்ள நேரத்தில் இந்தியா வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்ட வேண்டும் என்ற நோக்குடன்…
-
தங்கம் வாங்க சிறந்த நேரமா?
தங்கத்தில் முதலீடு செய்தால் பெரிய லாபம் ஈட்டலாம் என முதலீட்டாளர்கள் இந்தாண்டு எடுத்த முடிவு தலைகீழாக மாறிப்போய் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 14 விழுக்காடு இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை வீழ்ந்துள்ளது. போர் மற்றும் கொரோனா உள்ளிட்ட பேரழிவான காலகட்டத்தில் தங்கம் புதிய உச்ச விலையை எட்டியது. அதாவது, கடந்த மார்ச் 2022-ல் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 69 டாலர்களாக இருந்தது. இந்தாண்டு…
-
ரூபாய்-ரியாலில் வர்த்தகம் நடத்த ஆயத்தம்
இந்தியா-சவுதி அரேபிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயில் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரியால்-ரூபாய் இடையே வர்த்தகம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் சவுதியில் யுபிஐ முறை மற்றும் ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்த இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை…
-
இதில் தான் உயர்ந்து இருக்கிறோம்!!!
உலகிலேயே இந்தியா தான் அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலகளவில் உணவு தானிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவும் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக உடைத்த அரிசி எனப்படும் நொய் மற்றும் அரிசி ஏற்றுமதி செய்தால் 20 விழுக்காடு கூடுதல் வரி உள்ளிட்டவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சூழலில் நடப்பாண்டு 52 மில்லியன் டன் அளவுக்கு…
-
வெளிநாடு செல்லும் EPFO…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் எனப்படும் EPFO நிறுவனம் இந்தியாவுக்கு வெளியிலும் இயங்க பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது. அடுத்த கால் நூற்றாண்டில், சமூக பாதுகாப்புக்காக 2037ம் ஆண்டுக்குள் உலகின் பலநாடுகளிலும், குறிப்பாக ஆசியா முழுவதும் இயங்கும் வகையில் இந்த அமைப்பு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான், பகுதியாக லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் கிளை தொடங்கும் பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.சிறு சிறு நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு கிளைகளை தொடங்க…
-
“இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மேலும் உயரும்”…
இந்தியாவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் உயர்வு குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு மற்றும் கருத்துக்கேட்டது. இதன்படி கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பணவீக்கம் மீண்டும் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.அரிசி, கோதுமை,மற்றும் பருப்பு வகைகள் விலையேற்றம் கண்டுள்ளதால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவின் ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கின்றனர்.இந்த சூழலில் ஜூலை மாதம் 6.71 விழுக்காடாக இருந்த சில்லறை பணவீக்கம் கடந்தமாதம் 6 புள்ளி 9 ஆக இருக்கும் என்று…
-
அரிசி ஏற்றுமதிக்கு தடை ஏன்?: அரசு விளக்கம்
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சில ரக அரிசிகள் ஏற்றுமதிக்கு மட்டும் 20% கூடுதல் வரி வித்தக்கப்பட்டுள்ளது, இதற்கு காரணம் என்ன என்று மத்திய அரசின் உணவுத்துறை செயலாளர் விளக்கம் தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களில் விலையேற்றம் மற்றும் அதிகளவு ஏற்றுமதியே காரணிகள் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது இந்தியாவில் நடப்பாண்டின் முதல் நாளில் 16 ரூபாயாக இருந்த உடைத்த அரிசி, செப்டம்பர் மாதம் 8ம் தேதி கிலோ 22…
-
அமெரிக்க பங்குச்சந்தையிலும் இந்திய சிஇஓ-களின் ஆதிக்கம்…
அமெரிக்காவின் முன்னணி பங்குச்சந்தைகளில் ஒன்றாக திகழ்வது s&p500 அமைப்பு.. அமெரிக்காவின் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்கள் தங்கள் பங்கு நிலவரங்களை இந்த சந்தையில் பட்டியலிடுவது வழக்கம். இந்த சந்தையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் மெல்ல உயர்ந்து வருகிறது. இது தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஸ்டார் பக்ஸ் நிறுவனம் அண்மையில் அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக லக்ஷ்மன் நரசிம்மனை நியமித்துள்ளது. லக்ஷ்மன் மற்றும் 25 இந்திய வம்சாவளியினர் குறித்து புளூம்பர்க் நிறுவனம் ஒரு…
-
“இந்தியாவின் மொத்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை கையிருப்பு இந்தாண்டில் குறையும்”…
இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக அந்நிய நாட்டு கரன்சிகள் கையிருப்பு சரிந்து வருகிறது என டாயிட்ச் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது., நடப்பு நிதியாண்டில் வணிக பற்றாக்குறை 300பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 விழுக்காடாகும்.நடப்புக்கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும்பட்சத்தில் திருப்பி செலுத்த வேண்டிய…
-
ஏர் இந்தியாவுக்காக 4 பில்லியன் டாலர் நிதி திரட்டும் டாடா-சன்ஸ்
இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான நிறுவனத்தை நவீனப்படுத்தவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தமாக 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 4 பில்லியன் டாலர் நிதியை ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் வகையில் திரட்ட…