-
ஐரோப்பாவில் ஜாக்மா, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி !
சீனத் தொழிலதிபரும், இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக்மா ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார், சீன அரசின் ஏகபோக எதிர்ப்பு விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் ஏற்பட்ட சிக்கலுக்குப் பின்னர் அவர் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக அவர் ஸ்பெயின் சென்றுள்ளார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்திருந்தது. கடந்த ஒரு வருடமாக அவர் வெளிநாட்டுப் பயணங்கள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2018 இல் மூன்று…
-
துறைமுகங்களில் காத்திருக்கும் கப்பல்கள்! முடங்கும் விநியோகம்!
கண்ட்டெயினர் தட்டுப்பாடு ஓரளவு சீரடைந்து வரும் வேளையில் உலக அரங்கில் புதிய சிக்கல் ஒன்று தலையெடுத்து வருவது பொருளாதார நிபுணர்களைக் கவலையடைய வைத்துள்ளது, உலகின் பரபரப்பான துறைமுகங்களில் நுழைவதற்காகக் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெருந்தொற்றுக் கால நீண்ட முடக்கம் முடிவடைந்து கணினி முதல் கார்கள் வரை நுகர்வோர் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்பானது இந்தக் காத்திருப்பின் மூலமாக மேலும் சிக்கலை…
-
இந்தியாவில் வரலாறு காணாத அளவில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ! – காரணம் என்ன ?
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்தியாவின் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இந்த மின்சார தேவை மூலம் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவில் இருக்கும் நிலக்கரி மின்சார உற்பத்தி தளத்தில் இன்னும் சிறிது நாட்களுக்கு மட்டுமே…
-
$ 135 பில்லியன்களை இழந்த உலகப்பணக்காரர்கள் – திகிலூட்டும் “எவர்கிராண்ட்” நெருக்கடி !
சீன நிறுவனமான எவர்கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பானது 7.2 பில்லியின் டாலர்கள் சரிந்து 198 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இரண்டாவதாக உலகப்பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசானின் ஜெஃப் பெஸாஸ்ன் சொத்துமதிப்பானது 5.6 பில்லியன் டாலர்கள்…
-
$ 135 பில்லியன்களை இழந்த உலகப்பணக்காரர்கள் – திகிலூட்டும் “எவர்கிராண்ட்” நெருக்கடி !
சீன நிறுவனமான எவர் கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பானது 7.2 பில்லியன் டாலர்கள் சரிந்து 198 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இரண்டாவதாக உலகப்பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில இருக்கும் அமேசானின் ஜெஃப் பெஸாஸ் 5.6 பில்லியன் டாலர்கள்…
-
கிடுக்கிப் பிடி போடும் சீன அரசு, அழிவை நோக்கி டெக் நிறுவனங்கள்!
கடந்த சில மாதங்களாகவே சீனாவின் டெக் நிறுவனங்களுக்குக் கெட்ட காலம் தான் போல. பன்னாட்டு பொருளாதார அரங்கில் கொடிகட்டிப் பறந்த பல சீன நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பெரும் இழப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது சீனாவில்? சீனாவின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்று ANT Financial. “ஜேக் மா” என்பவரால் நிறுவப்பட்ட அலிபாபா குழுமத்தின் அங்கமான இந்த நிறுவனத்தின் மீது கடுமையான அழுத்தங்களை சீன அரசு மேற்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்தது. சீன அரசை எதிர்மறையாக விமர்சித்த…