Tag: IPO Updates

  • ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் ஐபிஓ இன்று துவக்கம் !

    மும்பையை சேர்ந்த ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் ஐபிஓ டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை 530லிருந்து 550 ரூபாய் வரை இருக்கும் என்று நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் 660 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசமுள்ள 1.2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் 27 பங்குகள் அல்லது அதன் மடங்குகளில் வாங்கலாம் என்று…

  • “டேகா இண்டஸ்ட்ரீஸ்” ஐபிஓ துவங்கியது !

    சுரங்கத் துறை நிறுவனமான “டேகா இண்டஸ்ட்ரீஸ்” தனது ஐபிஓ விற்பனையை இன்று (டிசம்பர் 1) தொடங்கியது. டிசம்பர் 3 ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் 443 ரூபாயிலிருந்து 453 ரூபாய் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 33 பங்குகளையும், அதிகபட்சமாக 33ன் மடங்குகளிலும் வாங்கலாம். ஜூன் 30 இல் முடிந்த வருடாந்திர அறிக்கையின்படி இந் நிறுவனம் 179.38 கோடி ரூபாயை வருமானமாக பெற்றிருக்கிறது. நிகர லாபமாக 11.88 கோடியை பெற்றிருக்கிறது. டேகா,…

  • ஐபிஓ-க்களின் அணிவகுப்பு ! 19 ஆயிரம் கோடி திரட்டப் போகும் நிறுவனங்கள் !

    அடுத்த 15 நாட்களுக்குள் ஐபிஓ மூலமாக 19 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஸ்டார் ஹெல்த் பங்குகள் வெளியீடு நேற்றுத் துவங்கியது. மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிஇ-இன்போ சிஸ்டம்ஸ், ரேட் கெய்ன் ட்ராவல்ஸ், ஆனந்த் ரதி நிறுவனங்கள் என்று தொடர்ந்து அடுத்த வாரம் பங்கு சந்தையை ஆக்கிரமிக்கப் போகின்றன ஐபிஓக்கள். அதானி வில்மர் மற்றும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக உள்ளன. டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓவை புதன்கிழமை…

  • IPO வுக்கான ஒப்புதல் பெற்ற “ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ்” நிறுவனம் !

    தென் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் இருக்கும் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் இதுவரை பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிறுவனம் பொது வெளியீட்டுக்கான (IPO) வரைவை செபியிடம் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தப் பொது வெளியீட்டின் மூலம் 800 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐபிஓ மூலம் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பங்குகள், மற்றும் 550 கோடிக்கான சலுகை…

  • பதஞ்சலி “ருச்சி சோயா” வின் IPO !

    புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் இணை நிறுவனரான பதஞ்சலி நிறுவனத்தின் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செபி ஒப்புதல் பெற்று ஐபிஓ நிதி திரட்டலுக்குத் தயாராகி வருகிறது. ஐபிஓவின் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக இருக்கும். இந்த செயல்பாட்டு மூலதனம், தேவைகள் மற்றும் நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. பதஞ்சலி குழுமத்தின் ஒரு அங்கமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், இந்திய சமையல் எண்ணெய் துறையில் முன்னணி எஃப்எம்சிஜி பிராண்டுகளில் ஒன்றாகும். சோயா உணவு உற்பத்தியாளர்களில்…

  • தயார் நிலையில் “ஸ்டெர்லைட் பவர்” – IPO

    செபியின் ஒப்புதலைப் பெற்று, ஸ்டெர்லைட் பவர் ட்ரான்ஸ்மிஸன் நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது, ரூ.1,250 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை உள்ளடக்கியதாக இந்த ஐபிஓ இருக்கும், வேதாந்தா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் தனிப்பட்ட சொத்துக்களை வைத்து நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் செயல்படுகிறது. இருநாடுகளிலும் செயல்படும் ஒரு முன்னணி தனியார் துறை மின் பரிமாற்ற உள்கட்டமைப்பு நிறுவனமாக ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் இருக்கிறது. உள்கட்டுமானத்துறை, மின்பரிமாற்றத்…

  • எதிர்பார்ப்பில் “பென்னா சிமெண்ட்” IPO !

    முன்னணி சிமெண்ட் தயாரிப்பாளரான பென்னா சிமெண்ட் ரூ.1,550 கோடியில் ஐபிஓ வுக்கான அனுமதியைப் பெற்று அதற்கான ஆயத்தப்பணிகளில் இருக்கிறது, இதில் ரூ.1,300 கோடி புதிய பங்குகள் விற்பனையும், ரூ.250 கோடி முதலீட்டாளர்களுக்கான சலுகை விற்பனையும் இருக்கும். இது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்த சிமெண்ட் நிறுவனத்தின் இரண்டாவது முயற்சியாகும், இந்த நிதி திரட்டல் நிறுவனத்தின் கடனைக் குறைக்கவும், புதிய விரிவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படும். பென்னா சிமெண்ட்ஸ் தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் நம்பகமான பிராண்ட் ஆகும். நெறிப்படுத்தப்பட்ட ரியல்…

  • மெகா ஹிட் அடிக்குமா ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் “ஸ்டார் இன்சூரன்ஸ்” ஐபிஓ !

    ராகேஷ் ஜூன்ஜுன்வாலா மற்றும் வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் உள்ளிட்ட முதலீட்டாளர்களின் கூட்டமைப்புக்குச் சொந்தமான ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்ஸ் கோ லிமிடெட் முதலீடு திரட்டுவதற்காக அதன் பங்குகளை பட்டியலிடுகிறது. ஆரம்ப விலையாக 870 – 900 இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதியிலிருந்து டிசம்பர் 2 வரை பங்கு விற்பனை நடைபெறும். டிசம்பர் 10 ம் தேதி சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மூலதன வழிவகைகளைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்தப்படும். தற்போது சேஃப்கிராப்…

  • அதிர்ச்சியூட்டும் பேடிஎம் IPO சரிவு ! முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்கிறது?

    பேடிஎம் பங்குகளின் அதிர்ச்சியூட்டும் இரண்டு நாள் சரிவானது, ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) விஷயத்தில் நாட்டின் வெற்றிகரமான பொருளாதார ஆண்டாக இருக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கி உள்ளது. பேடிஎம் இன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை முன்னெப்போதும் இல்லாத அளவு வாங்கிய சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு மதிப்புகள் இரண்டு வர்த்தக அமர்வுகளில் 35% க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் இறுதி விலையான…

  • ₹ 760 மதிப்பிலான ஐபிஓ வரைவைத் தாக்கல் செய்தது எலின் எலெக்ட்ரானிக்ஸ் !

    எலின் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், செபியில் ₹ 760 மதிப்பிலான நிதியைத் திரட்ட ஐபிஓ வுக்கான வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. ஐபிஓ வில் ₹175 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியீடு மற்றும் அதன் தற்போதைய விளம்பரதாரர்கள் மற்றும் பங்குதாரர்களால் ₹585 கோடி வரை விற்பனை செய்வதற்கான சலுகை ஆகியவை இந்த வரைவில் இடம்பெற்றுள்ளன. இதில் பங்குதாரர்களான கமல் சேத்தியாவின் ₹32.10 கோடி, கிஷோர் சேத்தியாவின் ₹52.50 கோடி, கௌரவ் சேத்தியாவின் ₹47.40 கோடி, சஞ்சீவ் சேத்தியாவின்…