-
1 லட்சம் முதலீடு பண்ணுங்க.. 12,000 வட்டி வாங்குங்க..!!
நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..
-
விண்ணை தொடும் விலைவாசி – எகிறும் சில்லறை பணவீக்கம்..!!
உணவுப்பொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக, சில்லறைப் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.01% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலுக்கான பொருளாதாரக் கொள்கை !
அரசியலும் பொருளாதாரமும் ஒரே நாணயத்தின் இரு வேறுபட்ட பக்கங்கள். ஒரு தேர்தலில் போட்டியிடப் போகும் ஒரு அரசியல்வாதியை விட இதை யாரும் நன்கு புரிந்து கொள்ள முடியாது. நிச்சயமாக, அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க பொருளாதாரத்தைப் பயன்படுத்தும் திறமை அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்களா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தது. அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வாக்காளர்களின் பொருளாதார வாழ்க்கையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைச் செய்ய முடியும், ஆனால் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை மட்டுமே…
-
மூன்றாவது காலாண்டில் 20 % வளர்ச்சி கண்ட D Mart !
ராதாகிஷன் தமானி தலைமையிலான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (டிமார்ட்) டிசம்பர் காலாண்டில் விற்பனை மற்றும் லாபத்தில் 20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சாதாரண செயல்பாட்டு நிலைமைகள் மற்றும் குறிப்பிடத்தக்க பொருட்களின் பணவீக்கம் இருந்தபோதிலும் சில்லறை விற்பனையாளரின் வருவாய் செயல்திறன் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
-
2022 – அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகிதங்கள் 4 முறை உயரக்கூடும் !
பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு வட்டி விகிதங்களை நான்கு முறை உயர்த்தும் என்றும் ஜூலை மாதத்தில் அதன் இருப்புநிலை ரன்ஆஃப் செயல்முறையைத் தொடங்கும் என்றும் தெரிகிறது. அமெரிக்க தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டு வரும் விரைவான முன்னேற்றம் மற்றும் டிசம்பர் 14-15 தேதிகளில் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் சில இயல்பு நிலைக்கான பரிந்துரைகள் இவற்றை வெளிப்படுத்துவதாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
-
பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.
-
விலைவாசி உயர்வு 2022 இல் அதிகமாக இருக்கும் !
அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பணவீக்கத்தின் தாக்கத்தை நுகர்வோர் உணரக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழப்பதால், சில்லறை நுகர்வோருக்கான விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மொத்த விற்பனை பணவீக்கம் 1991 நவம்பரில் இருந்து மிக வேகமாக அதிகரித்து, எட்டாவது மாதத்தில் 14.2 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.48 சதவீதமாக இருந்து மூன்றே மாதத்தில் 4.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.…
-
ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை – இந்திய ரிசர்வ் வங்கி!
அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே ரிசர்வ் வங்கி, ரிவர்ஸ் ரெப்போ ரேட் உள்ளிட்ட நிதி விகிதங்களை உயர்த்தவில்லை. ரெப்போவுக்கும், ரிவர்ஸ் ரெப்போவிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ ரேட் உயர்த்தப்படும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் அதுவும் நடக்கவில்லை. உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள் அந்தந்த நாட்டின் பொருளாதார பணவீக்கம் குறித்து கவலைப்படுகின்றன. ரிசர்வ் வங்கியும் பணவீக்க நிலைமையை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பணவீக்கத்துக்கு எதிராக எந்த விதமான ‘இறுக்கமான’நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான…
-
2021 – ஒரு பொருளாதாரப் பார்வை !
இந்த வருடத்தின் கடைசியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2022 புத்தாண்டு பிறந்து விடும். 2021ல் பொருளாதாரரீதியாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய சிலவற்றை மட்டும் பார்ப்போம். சர்வதேச சந்தைகளில் ஆயுள் காப்பீட்டுக்கான கட்டணங்கள் உயர்ந்ததையடுத்து இந்தியாவிலும் கட்டணம் உயர்ந்தது. குரூப் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டதையடுத்து தனிநபர் இன்சூரஸிலும் விலையேற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே எஸ்பிஐ கார்டுதாரர்கள் இஎம்ஐயில் பொருட்கள் வாங்கினால் 99 ரூபாயுடன் சேர்த்து அதற்கான பிராசசிங் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த திட்டம்…
-
பிஸ்கட் முதல் சோப்பு வரை தொடர்ந்து உயரும் விலைவாசி !
மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் இந்தியாவின் இரு பெரும் நுகர்வோர் நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர்ஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட்டின் சோப்பு மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவை இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக விலையேற்றம் கண்டன. தனிநபர் பயன்படுத்தும் பொருட்களில் இந்துஸ்தான் யூனிலீவர் பொருட்கள் 4 முதல் 22 சதவீதம் வரையிலும், ஐடிசியின் பொருட்கள் 8 முதல் 10 சதவீதம் வரையிலும் விலையேற்றம் கண்டன. பிஸ்கட் மற்றும் இனிப்பு தயாரிக்கும் பார்லே நிறுவனமும் 8 முதல் 10 சதவீதம்…