-
பருவமழையும் பணவீக்கமும்!
“இந்தியாவின் நிலையற்ற மற்றும் இயல்பைவிட குறைவான பருவமழை, பணவீக்கம் மற்றும் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு சவால்களை உருவாக்கக்கூடும்.” என்று பார்க்லேஸ் பிஎல்சியின் இந்தியத் தலைமைப் பொருளாதார நிபுணர் கணிப்பு. “பருவமழைப் பொழிவு இயல்பை விட 8% குறைந்திருக்கிறது, இது எதிர்வரும் விதைப்பு மற்றும் அறுவடைக்காலங்களை பாதிக்கும், இதன் அழுத்தமானது நுகர்பொருட்களின் விலை மீது எதிரொலித்து விவசாயத்தை கடுமையாகப் பாதிக்கும்” என்று ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ராகுல் பஜோரியா கூறி இருக்கிறார், “இதன் தாக்கம் நடுத்தர கால…