-
மின்சார வாகனங்களுக்கான நாடு தழுவிய பேட்டரி மாற்றுக் கொள்கையை இந்தியா இறுதி செய்ய உள்ளது
இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையை மின்மயமாக்குவதற்கான விரைவுபடுத்தும் ஆற்றலை, பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை சில நிமிடங்களில் புதியதாக மாற்றுவதில் ஆரம்பிக்கிறது இந்தியாவில், மின்சார ஸ்கூட்டர்களின் பேட்டரி மாற்றுதல் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 2030க்குள், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வாகனங்களில் 30% மின்சாரமாக இருக்கும். மின்சார பயணிகள் கார்கள் மொத்த EV விற்பனையில் சுமார் 5% மட்டுமே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். EV க்களை அதிகரிக்கும் முயற்சியில், அரசாங்கம் மின்சார இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியங்களை அதிகரித்துள்ளது…
-
சென்னை அருகே 2500 கோடி செலவில் பிரம்மாண்ட பேட்டரி தொழிற்சாலை – லூக்காஸ்-டி.வி.எஸ்
லூக்காஸ் டி.வி.எஸ் லிமிடெட் நிறுவனமும், அமெரிக்காவை மையமாகக் கொண்ட 24M டெக்னாலஜீஸ் நிறுவனமும் இணைந்து சென்னை அருகே “செமி சாலிட்” வகை “லித்தியம்- அயான்” பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 2500 கோடி செலவில் அமைக்க உள்ளன. 2023 ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் தொழிற்சாலை தனது வணிக உற்பத்தியைத் துவங்கும் என்றும், துவக்கத்தில் இந்திய சந்தைக்காக பேட்டரிகள் தயாரிக்கப்படும் என்றும் “லூக்காஸ் டிவிஎஸ்” நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் எரிசக்தி சேமிப்பு, மின்சார…