-
IPO மதிப்பீடுகளில் செபி தலையிடாது-அஜய் தியாகி !
IPO – மதிப்பீடு தொடர்பான விஷயங்களில் ‘செபி’ தலையிடாது என்று அதன் தலைவர் அஜய் தியாகி கூறினார். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர்,” ஒரு சீர்செய்யும் நிறுவனமாக செபி IPO மதிப்பீட்டில் ஈடுபடாது, ஈடுபடக்கூடாது. உலக அளவில், IPO க்கள் (ஆரம்ப பொது வழங்கல்கள்) வெளிப்படுத்தல் அடிப்படையிலான முறையை பின்பற்றுகின்றன. ஸ்டார்ட்-அப் ஐபிஓக்கள் சமீபத்தில்தான் தொடங்கின. இது ஒரு புதிய வகை முதலீடு. முதலீட்டாளர்கள் இதற்குப் இப்போதுதான் பழகி வருகின்றனர். முன்னதாக, தொழில்நுட்ப நிறுவனங்களில் பல வெளிநாட்டு…
-
IPO வுக்குத் தயாராகும் நவி !
இந்திய டிஜிட்டல் சந்தையில் முன்னணி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால், தன் கல்லூரி கால நண்பரான அங்கித் அகர்வாலுடன் இணைந்து 2018ல் நவி டெக்னாலஜிஸ் என்கிற நிதி சேவை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2021ல் லாபமீட்டியது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ஐபிஓ வெளியிட ஆயத்தமாக்கி வருகிறார் சச்சின். ஆக்ஸிஸ் கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ், போஃபா செக்யூரிட்டிஸ் மற்றும் கிரெடிட் சூய்ஸி ஆகியவை ஆலோசகர்களாக வந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும்…
-
கிரிப்டோகரன்சி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து இந்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோ விவகாரத்தை வரைவாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும் கிரிப்டோ கரன்சி தொடர்பாக இந்திய அரசு நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் அதிகமான அளவில் முதலீடு செய்து இருப்பதால் இன்றைய நிலையில் கிரிப்டோகரன்சியை இந்திய அரசால் தடை செய்ய இயலாது என்றும், இதனால் குறிப்பிட்ட சந்தை…