Tag: Edible Oil

  • தடையை நீக்கிய இந்தோனேசியா.. உணவு எண்ணெய் விலை குறையுமா?

    சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சமையல் எண்ணெய்யின் சில்லறை விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க உணவு அமைச்சகம் வியாழக்கிழமை சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மே மாதத்திற்குப் பிறகு இதுபோன்ற மூன்றாவது சந்திப்பு இதுவாகும். குறிப்பாக பாமாயிலின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தோனேசியா, ஏற்றுமதிக்கான தடையை நீக்கி, சூரியகாந்தி மற்றும் சோயா எண்ணெய்களின் விநியோகத்தை எளிதாக்கியதை அடுத்து, உலகளாவிய சமையல் எண்ணெய் விலைகள்…

  • தங்கம், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி விலை குறைப்பு

    மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் கச்சா சமையல் எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி விலையை குறைப்பதாக அறிவித்தது. நிதி அமைச்சகம் ஜூலை 15ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கத்தின் அடிப்படை இறக்குமதி விலை 10 கிராமுக்கு 37 டாலரும், வெள்ளியின் விலை ஒவ்வொரு கிலோவுக்கு 3 டாலரும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த குறைப்பால், தங்கத்தின் அடிப்படை இறக்குமதி விலை $585/10gலிருந்து $548/10g ஆகக் குறைகிறது. மற்ற தங்கக் கட்டிகளின் இறக்குமதிக்கு புதிய விலை பொருந்தும் என்று…

  • சமையல் எண்ணெய் – ரூ.10 வரை விலை குறைக்க உத்தரவு

    இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) ஒரு வாரத்திற்குள் லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான எம்ஆர்பியை பராமரிக்கவும் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்வதால், கடந்த சில மாதங்களாக சில்லறை விலைகள் அழுத்தத்திற்கு உள்ளாகின. கடந்த மாதம் சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்கள் லிட்டருக்கு 10-15 ரூபாய் வரை விலையை குறைத்துள்ளனர். உணவுத்துறை…

  • உணவுப் பொருட்களை சேமிக்கும் விற்பனையாளர்கள் ! கோவிட் 3 ஆம் அலை அச்சம் !

    அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக்…

  • பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைப்பு ! விலைவாசி உயர்வு எதிரொலி !

    சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அடிப்படை சுங்க வரி மார்ச் 2022 இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் அடிப்படை சுங்க வரியை (பிசிடி) 17.5 சதவீதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை 12.5 சதவீதமாகக் குறைத்து, டிசம்பர் 31, 2022 வரை அளவு கட்டுப்பாடுகளும் இல்லாமல் இறக்குமதியைத் தொடர அனுமதித்துள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC)…