-
பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தில் (ESOP) பிளிப்கார்ட் முதலிடம் !
வால்மார்ட்-க்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ரூ.17,000 கோடிக்கு பணியாளர்கள் பங்கு உரிமையாளர் திட்டத் (ESOP) தொகுப்பை உருவாக்கியுள்ளது, இது பணியாளர்களுக்கு பங்கு முதலீட்டு விருப்பங்களை ஒதுக்கீடு செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிளிப்கார்ட் முதலிடத்தில் இருக்கிறது. நிர்வாக தேடல் நிறுவனமான லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பிளிப்கார்ட்டைத் தொடர்ந்து ஓயோ, ஜோமாட்டோ, பேடிஎம் மற்றும் நைகா ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
-
IPO வுக்குத் தயாராகும் நவி !
இந்திய டிஜிட்டல் சந்தையில் முன்னணி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால், தன் கல்லூரி கால நண்பரான அங்கித் அகர்வாலுடன் இணைந்து 2018ல் நவி டெக்னாலஜிஸ் என்கிற நிதி சேவை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2021ல் லாபமீட்டியது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ஐபிஓ வெளியிட ஆயத்தமாக்கி வருகிறார் சச்சின். ஆக்ஸிஸ் கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ், போஃபா செக்யூரிட்டிஸ் மற்றும் கிரெடிட் சூய்ஸி ஆகியவை ஆலோசகர்களாக வந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும்…
-
விதிமீறல்களுக்காக இ-காம் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் !
கடந்த ஓராண்டில் மட்டும் தங்கள் தயாரிப்புகளில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் சரிவர இல்லாததால் 217 பொருட்களுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் அதிகபட்சமாக மின்னணு சாதனங்கள். ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விதிமீறலுக்குள்ளானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நோட்டீசில் இருக்கும் 217 அறிவிப்புகளில், 202 பொருட்களின் மீது தயாரிக்கப்பட்ட இடத்தின் பெயர், காலாவதியான தேதி, மற்றும் இறக்குமதியாளர்கள் முகவரி இல்லாதது, எம்.ஆர்.பி யை விட அதிக விலைக்கு…