-
பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.
-
பிரமல் பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? – ஆனந்த் ஸ்ரீனிவாசன்
சந்தையில் இப்போது பல்வேறு நிறுவனங்களின் பத்திரங்கள் கிடைக்கிறது, பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளில் பத்திர முதலீடு சிறப்பானதாக நிபுணர்களால் கருதப்படுகிறது, ஏனெனில் அவை வைப்பு நிதி முதலீடுகளை விட அதிக வருமானமீட்டக்கூடியவை, சில பத்திரங்கள் 9-10 % வருமானமீட்டும் வகையில் இருப்பதால் பத்திர முதலீடு என்பது இப்போது பல்வேறு தரப்பினரால் விரும்பப்படும் வாய்ப்பு. அதே நேரத்தில் பல்வேறு முகவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பாதுகாப்பற்ற முதலீடுகளுக்குள் உங்களைத் தள்ளிவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம், பிரமல் கேபிடல்…