பிரமல் பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? – ஆனந்த் ஸ்ரீனிவாசன்


சந்தையில் இப்போது பல்வேறு நிறுவனங்களின் பத்திரங்கள் கிடைக்கிறது, பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளில் பத்திர முதலீடு சிறப்பானதாக நிபுணர்களால் கருதப்படுகிறது, ஏனெனில் அவை வைப்பு நிதி முதலீடுகளை விட அதிக வருமானமீட்டக்கூடியவை, சில பத்திரங்கள் 9-10 % வருமானமீட்டும் வகையில் இருப்பதால் பத்திர முதலீடு என்பது இப்போது பல்வேறு தரப்பினரால் விரும்பப்படும் வாய்ப்பு. அதே நேரத்தில் பல்வேறு முகவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பாதுகாப்பற்ற முதலீடுகளுக்குள் உங்களைத் தள்ளிவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம், பிரமல் கேபிடல் & ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள பத்திரங்கள் இப்போது சந்தையில் கிடைக்கிறது, இந்த நிறுவனம் அஜய் பிரமல் என்கிற நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து பொருட்களில் பாரம்பரியம் கொண்ட புகழ்பெற்ற குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

1000 ரூபாய் முகமதிப்புக் கொண்ட இந்தப் பத்திரங்கள் சந்தையில் இப்போது சிறப்புத் தள்ளுபடியோடு 880 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதாவது உங்கள் முதலீட்டில் 9 % வருமானமீட்டித் தரக்கூடிய பத்திரங்கள். இந்த பத்திரம், பாதுகாப்பானது என்று சந்தை மதிப்பீட்டாளர்களால் (ICRA) AA சான்று வழங்கப்பட்டவை. இந்தப் பத்திரங்களின் முதிர்வுக் காலம் 10 ஆண்டுகள், உழைத்து சேமித்த பணத்தை பயனுள்ள பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது என்ற வகையில் இந்த பத்திரங்களில் முதலீடு செய்வது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.

DHLF நிறுவனத்தை வாங்குவதற்கு நடந்த போட்டியில் அதானி குழுமம், ஓக்ட்ரீ கேப்பிட்டல் மற்றும் அஜய் பிரமல் குழுமம் ஆகியவை போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றது பிரமல் குழுமம், பல்வேறு துறைகளில் 40 ஆண்டுகால வணிக அனுபவமும், நிறுவனத் தலைவர் அஜய் பிரமல் மும்பை பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் வணிகம் பயின்றவர், பிரமல் நிறுவனத்தின் அறக்கட்டளை தற்போது 25 மாநிலங்களில் செயல்பட்டு மாநில அரசுகளுடன் இணைந்து 112 மில்லியனுக்கும் அதிகமான விளிம்பு நிலை மக்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி போன்ற துறைகளில் செயல்பட்டுவருவது நம்பிக்கை தரக்கூடிய விஷயம்.

பாதுகாப்பு, AA தரச் சான்றிதழ், நீண்ட நிதித்துறை அனுபவம் கொண்ட நிறுவனம், சிறந்த கல்வியாளரின் வழிநடத்தல், சமூகப் பார்வை, செய்யும் முதலீட்டுக்கு 9 % உறுதியான வருமானம் மட்டுமின்றி, சந்தையில் மிகச்சிறந்த முதலீட்டாளர்களால் தேர்வு செய்யப்பட்டுப் பெறப்பட்ட இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்வது இன்றைய பொருளாதார சூழலில் மிகுந்த பாதுகாப்பானதாகவும், நம்பிக்கையளிப்பதுமாக இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் பத்திரங்களைக் குறித்து அறிந்து கொள்ளவும், வாங்கவும் நீங்கள் திரு.ஜானகிராமன் அவர்களை 7305088517 என்ற அலைபேசி எண்ணில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *