-
ராணிப்பேட்டையில் மாபெரும் மின்வாகன உற்பத்தி தொழிற்சாலை! தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்!
“கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்” நிறுவனத்தின் இ-மொபிலிடி பிரிவான க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் மிகப்பெரிய மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி மூலம் 700 கோடி முதலீட்டின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டையில் 35 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக செயல்படும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கிரீவ்ஸ் ஆலை…
-
நம்பி இருந்த சிறு,குறு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமா ஃபோர்டு?
போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக வந்த அறிவிப்பு, நேரடித் தொழிலாளர்களை மட்டுமில்லாமல் அந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கி வந்த பல்வேறு சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது, ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்து வந்த சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பிரேசிலில் ஃபோர்டு மூடப்பட்டபோது இழப்பீடு வழங்கியதைப் போல தங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட…
-
இந்தியாவின் முதல் கடலில் மிதக்கும் காற்றாலைப் பூங்காவை அமைக்கும் தமிழ்நாடு !
பசுமை எரிசக்தி எனப்படும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் சூரிய ஒளி சக்தித் திட்டங்களில் தமிழகம் தடம் பாதிக்க விரும்பும் நிலையில், மன்னார் வளைகுடாவில் டென்மார்க் நாட்டின் நிதியுதவியுடன் $ 5-10 பில்லியன் அளவில் புதுப்பிக்கத்தக்க துறை முதலீட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கும், இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையில் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தீவொன்றில் இந்த பசுமை எரிசக்தித் திட்டம் துவங்கப்படவிருக்கிறது. இதன்மூலம் 4 முதல் 10 ஜிகாவாட் மின்னுற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. டென்மார்க்கின் எரிசக்தித்…
-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ₹25 உயர்ந்ததால், தமிழகத்தில் சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது. 9 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹285 உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ₹1831.50 ஆக உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி சரி செய்யத் தொடங்கியதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு இரண்டு முறை…
-
சென்னையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் ரத்து! – தமிழக அரசு அதிரடி
-
தமிழ்நாடு 2021 பட்ஜெட் குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் மற்றும் பிற வல்லுனர்களின் கருத்து!
-
தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் ! வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை !
வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக அமைச்சர் நெகிழ்ச்சி! வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை அடுத்த தலைமுறைக்கு கணினி பற்றி தெரியும் அளவுக்கு கழனி பற்றி தெரியவில்லை – அமைச்சர். காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு 15,000 12.50 கோடி – உழவர் சந்தைகளை மேம்படுத்த கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு…
-
புதிய மாவட்டங்களில் வரப்போகும் டைடல் பார்க்குகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமா?
-
தமிழ்நாடு பட்ஜெட் 2021-2022: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?
உரையை முடித்துக்கொண்ட PTR! இன்றைய பட்ஜெட்டின் அம்சங்களை கீழே காணலாம்! சற்றுமுன் வந்த தகவல்: அதிமுக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடியால் பல்வேறு குழப்பம் மற்றும் குளறுபடிகள், முறைகேடுகள் குறித்து முறையாக ஆராய்ந்து பின்னர் கடன் ரத்து செயல்படுத்தப்படும் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்கள் 28 ஆயிரம் கோடி வரியை வசூலிக்க சமாதான் திட்டம் செயல்படுத்தப்படும் தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் மொத்த வருவாய் மதிப்பீடு – 2,60,409.26…