சென்னையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் ரத்து! – தமிழக அரசு அதிரடி


சென்னை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கியதால், ஓஎம்ஆர் ராஜீவ் காந்தி சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் ஆகஸ்ட் 30 முதல் நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். துரைப்பாக்கம், மேடவாக்கம், பெருங்குடி மற்றும் கலைஞர் சாலை ஆகிய சுங்கச்சாவடிகளில்  வரி வசூல் நிறுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

முன்னதாக, சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய திருவையாறு எம்.எல். ஏ. துரை சந்திரசேகரன், தஞ்சாவூரிலிருந்து சென்னை வர பல சுங்கச்சாவடிகளை கடந்து மக்கள் வருவதாகவும் , அவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

தமிழகத்தில் அனைத்து சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.  இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து 5 சுங்கச்சாவடிகளை மூட கோரிக்கை வைக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில், துரைப்பாக்கம், மேடவாக்கம், பெருங்குடி மற்றும் கலைஞர் சாலை ஆகிய 4 சுங்கச்சாவடிகளில் சுங்க வரி வசூல் நிறுத்தப்படுவதாக அவர் அறிவித்தார்.

அரசின் இந்த அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு ஆறுதல் தந்துள்ளதாக சென்னைவாசிகள் தெரிவித்துள்ளனர். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *