-
ஐசிஐசிஐ வங்கி – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !
தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ, டிசம்பர் காலாண்டில் (Q3FY22) நிகர லாபத்தில் 25 சதவீதம் உயர்ந்து, ரூ. 6,194 கோடியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, இதுவரை இல்லாத காலாண்டு லாபமாகும். இதன் மூலமாக 5,800 கோடி நிகர லாபம் கிடைக்கும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் நிகர வட்டி வருமானம் கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.9,912 கோடியாக இருந்த நிலையில், 22ஆம் காலாண்டில் 23 சதவீதம் அதிகரித்து ரூ.12,236 கோடியாக உள்ளது.
-
ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் 3,795 கோடி – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !
2021 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்ஸின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3,486 கோடியிலிருந்து 8.86 சதவீதம் அதிகரித்து ரூ.3,795 கோடியாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.19,475 கோடியாக இருந்த காலாண்டின் செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு (YOY) 5.76 சதவீதம் அதிகரித்து ரூ.20,597 கோடியாக உள்ளது.
-
ஹிந்துஸ்தான் யூனிலீவர் மூன்றாம் காலாண்டு முடிவுகள் !
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பஞ்சாப் நேஷனல் வங்கி Q3 நிகர லாபம் 111.3% வரை இருக்கும் – மோதிலால் ஓஸ்வால்
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் ரூ.1,069.4 கோடி. ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டின் அடிப்படையில் இது 111.3 % வளர்ச்சி. சென்ற காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.2 % குறைவு. நிகர ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் வட்டி வருமானம் ரூ.7,240.30 அதாவது 12.9 % குறையக்கூடும், ப்ரீ ப்ரொவிஷன் ஆப்பரேட்டிங் லாபமானது 20.1 % குறைந்து Rs.5,106.50 கோடியாக இருக்கும்.
-
சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ₹ 84,328 கோடியாக அதிகரிப்பு !
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 84,328 கோடியாக அதிகரித்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி 2021-22 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு கணக்கு மற்றும் முதல் அரையாண்டிற்கான முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி நேற்று வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது,”நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வியாபாரம் ரூ.84,328 கோடியாக…