ஹிந்துஸ்தான் யூனிலீவர் மூன்றாம் காலாண்டு முடிவுகள் !


ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

HUL எஃப்எம்சிஜி விற்பனை 10% உயர்ந்து ₹12,900 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ₹11,682 கோடியாக இருந்தது. இந்துஸ்தான் யூனிலீவர் உள்நாட்டு நுகர்வோர் வளர்ச்சியில் 11% வளர்ச்சியைக் கண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத பணவீக்கத்தின் பின்னணியில் அனைத்து வகைகளிலும் கடினமான சேமிப்புகளை இயக்கி, நிகர வருவாய் நிர்வாகத்தின் கொள்கைகளைப் பயன்படுத்தி அளவீடு செய்யப்பட்ட விலை நிர்ணய நடவடிக்கைகளை எடுப்பதைத் தொடர்கிறது என்று HUL கூறியது.  “எங்கள் பிராண்டுகளுக்குப் பின்னால் நாங்கள் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் முதலீடு செய்கிறோம்,” என்று அது மேலும் கூறியது.

பிரிவு வாரியாக, மற்றும் பேப்ரிக் வாஷ் மற்றும் வீட்டு பராமரிப்பு ஆகியவற்றில் வணிகம் 23% வளர்ச்சியடைந்தது. அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பிரிவு 7% வளர்ச்சியைக் கண்டது. தோல் சுத்திகரிப்பு, தோல் பராமரிப்பு மற்றும் வண்ண அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றால் வழி நடத்தப்பட்டது. அதேசமயம் உணவுகள் மற்றும் புத்துணர்வு வணிக வளர்ச்சியானது, தேநீர் மற்றும் ஐஸ்க்ரீம்களின் திடமான செயல் திறனால் உந்தப்பட்டு, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% -ஆக இருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *