-
5.66 லட்சம் கோடி ரூபாய் லாபம்
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் நேற்று ஆயிரத்து 300 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டதால் அனைத்து துறை பங்குகளும் லாபம் பெற்றன. வங்கி,உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளில் குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த முதலீடுகளும் இந்திய பங்குச்சந்தையில் அதிகம் புழங்கியதால் சந்தை ஏற்றம் பெற்றது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தில் 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மும்பை பங்குச்சந்தையை போலவே தேசிய பங்குச்சந்தையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அமெரிக்க…
-
என்ன!!! 7லட்சம் கோடியா ?
உலகளாவிய பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல் உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சென்றுள்ளன பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 7 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தையில் இந்திய பங்குகளின் மதிப்பு 269.86லட்சம் கோடியாக சரிந்துள்ளது அமெரிக்க பெடரல் ரிசர்வ், கடன்களுக்கான வட்டியை மேலும் ஒரு முறை விலையேற்றம் செய்து அறிவிக்க…
-
இன்றைய சந்தை நிலவரம்…
வாரத்தின் கடைசி வர்த்தக தனமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் அதிகரித்து 59 ஆயிரத்து 956 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 886 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை என்று 60,000 புள்ளிகளை கடந்தது குறிப்பிடத்தக்கது. அதானி…
-
வரும் வாரம் இந்திய பங்குச் சந்தைகள் எப்படி இருக்கப்போகிறது?
அமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து துறை வட்டிகளையும் உயர்த்த வேண்டுமென அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் அண்மையில் கூறியிருந்தார். இது அந்நாட்டின் பங்குச்சந்தையில் தாக்கத்தை உண்டாக்கியது. இது மட்டுமல்லாமல் உலகளாவிய பங்குச்சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய பங்குச்சந்தையில் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த6 வாரங்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தையான நிப்டி, தற்போது திருத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்., வரும் வாரங்களில் இந்த…
-
அதிகரித்த FPI முதலீடு; 59,000 தொட்ட சென்செக்ஸ் புள்ளிகள்
அமெரிக்க பணவீக்கம் மெதுவாக வட்டி விகித உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை குவித்ததால் வியாழக்கிழமை சந்தைகள் நான்கு மாத உயர்வை எட்டின. இதன் விளைவாக, பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 59,000 ஐ கடந்தது. ஜூன் 30 வரையிலான ஆறு மாதங்களில் ₹2 டிரில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்ற வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs), ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வாங்குபவர்களை ₹6,719.75 கோடியாக மாற்றினர். தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, வியாழன் அன்று ₹2,298.08…
-
பங்குச்சந்தை – இந்த வாரம் எப்படி இருந்தது?
இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரம் முழுவதும் ஏற்றத்துடன் வணிகத்தை நிறைவு செய்து உள்ளன. இன்று மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்து 56 ஆயிரத்து 72 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 114 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 719 புள்ளிகள் என்ற நிலையிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இந்த வாரத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகளுக்கு மேல்…
-
பங்குச்சந்தை மேலும் உயருமா? காரணங்கள் இதோ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று 600 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்தால் அதன் மீது கூடுதல் வரியை இந்திய அரசாங்கம் விதித்திருந்தது. அந்த வரியை திரும்ப பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், ரிலையன்ஸ், ONGC போன்ற நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. இதே போல், கமாடிட்டி பொருட்களின் விலையும் சற்று குறைய தொடங்கி உள்ளதும், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழாக உள்ளதையும் சந்தை…
-
இன்று சந்தை உயர காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஒரு சதவிதம் அளவிற்கு உயர்த்துள்ளது. இன்றைய வர்த்தக் நேர முடியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 616 புள்ளிகள் அதிகரித்து 53 ஆயிரத்து 751 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 179 புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 999 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் இன்று அதிகரித்தது, கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 9 டாலர் வரை சரிந்து 102.77 டாலராக குறைந்தது, போன்றவை…
-
இன்றைய (05 July, 2022) பங்குச்சந்தை நிலவரங்கள்
இன்று காலை இந்திய பங்குச்சந்தைகள் 400 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகம் ஆன நிலையில், வர்த்தகத்தின் இறுதியில், சரிவுடன் பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன. இன்று காலை, ஆசிய பங்குச்சந்தைகள் உயர்ந்ததை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்திக்க தொடங்கின. இதற்கு எதிர்வர கூடிய நிறுவனங்களின் முடிவுகள் குறித்த அச்சம் ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் 37…
-
இன்று பங்குச்சந்தைகள் நிலை என்ன?
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை அதிகரித்து இருந்த நிலையில், மாலையில், சந்தை முடியும் நேரத்தில் 8 புள்ளிகள் மட்டும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8 புள்ளிகள் சரிவுடன்53 ஆயிரத்து 19 புள்ளிகள் என்ற நிலையில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 780 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. ஜூன் மாத எக்ஸ்பெயரி சரிவுடன் நிறைவடைந்த…