Tag: Wheat

  • போதுமான கோதுமை கையிருப்பில் உள்ளது!!!

    உள்ளூரில் அதிக கோதுமையை விநியோகிக்கும் வகையில் போதுமான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை செயலாளர் சுதன்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் சுமார் 24 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடப்பாண்டு ரபி பருவத்தில் மட்டும் 105 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை உற்பத்தி இருப்பதாகவும், சந்தைக்கு 95 முதல்…

  • கோதுமை இல்லை… அரிசியுமா இல்லை..?

    கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதை போல, அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நம் நாட்டில், அரிசியின் விலை அதிகரித்துள்ள நிலையில் ,அதன் விலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. உலக அளவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் 40 சதவிதம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி தான், என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி முதற்கட்டமாக, நொய் அரிசி…

  • கோதுமை பற்றாக்குறை உண்மையா? பொய்யா?

    உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, உலகிற்கே உணவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த 4 மாதங்களுக்கு உள்ளாகவே, இந்தியா தன்னுடைய தேவைக்கு தானியங்களை இறக்குமதி செய்தாக வேண்டிய நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக கோதுமை இறக்குமதியின் தேவையை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவிடம் போதுமான அளவில் கோதுமை கையிருப்பில் இருப்பதாகவும், இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்தது.…

  • கோதுமை பற்றாக்குறை.. சப்பாத்தி விலை உயரலாம்

    இந்தியா ‘உலகிற்கு உணவளிக்க’ தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நான்கு மாதங்களுக்குள், அரசாங்கம் தானிய இறக்குமதியை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்திய உணவுக் கழகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கோதுமை பணவீக்கம் கிட்டத்தட்ட 12% மாக உள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலையில், தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களால், வெளிநாட்டில் இருந்து கோதுமையை வாங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும்…

  • பிஜேபி செய்தித் தொடர்பாளரின் கருத்துக்களால் மேற்கு ஆசியாவில் இந்தியா நிராகரிக்கப் படுகிறதா?

    எகிப்து மற்றும் துருக்கியால் திருப்பி அனுப்பப்பட்ட இந்திய ‘துரம் கோதுமை’ தற்போது இஸ்ரேலிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எகிப்து மற்றும் துருக்கியின் முக்கிய உணவுப் பொருள் கோதுமையாகும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ’துரம் கோதுமை’யின் புரத சத்து 14 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது என்று துருக்கி நிராகரித்தது. எனினும் சோதனைக்காக எந்த மாதிரியும் எடுக்காமல் கப்பலை திருப்பி விட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஐடிசி நிறுவனமானது 56,000 டன் கோதுமையை ஏற்றுமதி…

  • துருக்கி நிராகரித்த ’துரம் கோதுமை’ எகிப்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது!!

    துருக்கி நிராகரித்த ’துரம் கோதுமை’ எகிப்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது, இஸ்தான்புல்லை தளமாகக் கொண்ட வர்த்தகர்களை மேற்கோள் காட்டி, S&P Global Commodity Insights ருபெல்லா வைரஸைக் கண்டறிந்த பிறகு துருக்கி, கோதுமை சரக்குகளை நிராகரித்ததாகக் கூறியது. துருக்கிக்கான போக்குவரத்து நேரம் சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் உள்ள மாறுபாடு பைட்டோசானிட்டரி பிரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறினர். இருப்பினும், நோய்த்தொற்றுக்கான காரணம் இது அல்ல என்று ஒரு நிபுணர் கூறினார். “ரூபெல்லா…

  • இந்தியாவின் கோதுமை உற்பத்தி: அரசு நிர்ணயித்த MSP

    இந்தியாவின் கோதுமை உற்பத்தி ஜூன் மாதத்துடன் முடிவடையும் 2021-22 பயிர் பருவத்தில் சுமார் 106.41 மில்லியன் டன்களாக இருக்கும் என அதிகாரப்பூர்வமாக கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு உற்பத்தியை விட 3.8 மில்லியன் டன்கள் குறைவாகவும், 111.32 மில்லியன் டன்கள் என்ற முந்தைய மதிப்பீட்டை விட 4.41 சதவிகிதம் குறைவாகவும் உள்ளது வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மூன்றாவது மேம்பட்ட மதிப்பீட்டின்படி, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 314.51 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு…

  • கோதுமை கொள்முதலுக்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிப்பு

    மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதலுக்கான காலக்கெடுவை மே 31, 2022 வரை நீட்டித்துள்ளது என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி, மே 14 வரை, சுமார் 18 மில்லியன் டன் கோதுமை மத்திய அரசுக்கு வாங்கப்பட்டுள்ளது எனவும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட இது 51 சதவீதம் குறைவாகும் எனவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில், தானியங்களின் தரத்தைப் பொறுத்தவரை, பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் விவசாயிகளுக்கு அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்பான…

  • உணவுப் பொருட்களை சேமிக்கும் விற்பனையாளர்கள் ! கோவிட் 3 ஆம் அலை அச்சம் !

    அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக்…