Category: சந்தைகள்

  • $1.3 பில்லியன் திரட்டிய இந்திய நிறுவனங்கள் !

    இந்திய நிறுவனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு சந்தையில் 1.3 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 34 சதவீதம் குறைவு என்றும் அது கூறியுள்ளது. போன வருடம் இதே காலகட்டத்தில் உள்ளூர் நிறுவனங்கள் 2.03 பில்லியன் டாலர்களுக்கு மேல் வெளிநாட்டு சந்தையில் திரட்டின என்று ரிசர்வ் வங்கியின் தரவு காட்டுகிறது. அதேசமயம் வெளி வர்த்தக கடன் மூலமாக போர்ட்டம்சோலார் பிளஸ் நிறுவனம், ரூபாய் மதிப்பிலான…

  • வருகிறது ஸ்நாப்டீல் ஐபிஓ !

    இந்தியாவின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் தனது வளர்ச்சி திட்டத்திற்காகவும், வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்காகவும் முதலீட்டை திரட்ட ஐபிஓவினை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஐபிஓ வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும் , மார்ச் மாதம் ஐபிஓ வெளியிட இருப்பதாகவும் இதன் மூலம் 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் 200 மில்லியன் டாலர்களை திரட்ட ஸ்நாப்டீல் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்நாப்டீல் நிறுவனத்தில் அலிபாபா நிறுவனம், பிளாக் ராக், டெமா செக் ஹோல்டிங்ஸ், ஈபே நிறுவனங்கள் பங்குகளை வைத்துள்ளன.…

  • வாகன விற்பனை தொடர் வீழ்ச்சி ! நவம்பர் மாத நிலவரம் என்ன?

    நவம்பர் மாதம் வாகன விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது.செமி கண்டக்டர், சிப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை வாகன தயாரிப்பாளர்களை தடுமாற வைத்திருக்கிறது. மகிந்திரா அண்ட் மகிந்திராவின் விற்பனை நவம்பர் மாதத்தில் 4.3 சதவீதம் சரிந்து 40,102 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆனது. கார்களைப் பொறுத்தவரை, அக்டோபர் மாத விற்பனையை விட 3.4 சதவீதம் சரிந்து, 19,458 விற்பனை ஆனது. மகிந்திராவின் ட்ராக்டர் விற்பனை 41 சதவீதம் சரிந்து 27,681 யூனிட்டுகள் விற்பனை ஆனது. டிவிஎஸ்…

  • கிராமப்புற நுகர்வில் வீழ்ச்சி – நீல்சன் அறிக்கை

    மூலப்பொருட்களின் விலை உயர்வு, தயாரிப்புச் செலவு அதிகரிப்பு மற்றும் போதுமான வருமானம் இல்லாதது போன்ற காரணிகளால் கிராமப்புற நுகர்வு குறைந்து இருக்கிறது என்று நீல்சன் அறிக்கை தெரிவிக்கின்றது. 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், கிராமங்களில் தேயிலை முதல் ஷாம்பு வரையிலான சிறு வணிகர்களின் விற்பனை பொருட்களின் வளர்ச்சி விகிதம் 9.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. நீல்சன் தரவுகளின்படி எண்ணெய் வகைகள், மளிகை பொருட்கள், மற்றும் தனிநபர் ஒப்பனை பொருட்கள் முதலியவற்றில் ஒரு சரிவை பதிவு செய்துள்ளது. இதனால்…

  • ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்” – IPO நிலவரம் !

    இந்தியாவின் ‘வாரன் பபெட்’ என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஆதரவு பெற்ற ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனியின் ஐபிஓ வெளியீடு நவம்பர் 30ந் தேதி தொடங்கியது. இன்று கடைசி நாள் ஆகும். 4.49 கோடி ரூபாய்க்கு 99.86 இலட்சம் ஈக்குவிட்டி பங்குகளை விற்றது. விற்பனையின் கடைசி நாளான இன்று 22 சதவீத சந்தாதாரர்கள் கிடைத்துள்ளனர். ஸ்டார் ஹெல்த் நிறுவனம் 7,249 திரட்ட திட்டமிட்டுள்ளதுஅதன் ஒரு பங்கின் விலை 870 ரூபாயில் இருந்து 900 ரூபாய்…

  • பரபரப்பான டேகா இண்டஸ்டிரீஸ் ஐபிஓ

    டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓ வெளியீட்டின் இரண்டாம் நாளான இன்று, தனது விற்பனையை 5.31 மடங்கிற்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 8.64 மடங்கிற்கும் பதிவு செய்யப்பட்டது. டேகா, ஒரு பங்கின் விலை ரூ. 443லிருந்து 453 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசமுள்ள 1,36,69,478 பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓ வெளியீட்டின் இரண்டாம் நாளான இன்று, தனது விற்பனையை 5.31 மடங்கிற்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 8.64 மடங்கிற்கும் பதிவு செய்யப்பட்டது. டேகா…

  • ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் ஐபிஓ இன்று துவக்கம் !

    மும்பையை சேர்ந்த ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் ஐபிஓ டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை 530லிருந்து 550 ரூபாய் வரை இருக்கும் என்று நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் 660 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசமுள்ள 1.2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் 27 பங்குகள் அல்லது அதன் மடங்குகளில் வாங்கலாம் என்று…

  • 01-12-2021 (புதன்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

    இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 27 குறைந்து ₹ 4,488 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 30 குறைந்து ₹ 4,896 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.20 குறைந்து ₹ 66.30 ஆகவும் விற்பனையாகிறது.   தங்கம்     22 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,488.00 ₹ 4,515.00   (-) ₹ 27.00     தங்கம்   24 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம்   கிராம் ஒன்றுக்கு ₹ 4,896.00 ₹ 4,926.00…

  • சீரான வளர்ச்சி, நிலைத்தன்மை கொண்ட பங்குகள் – அறிமுகம் !

    சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் நிறுவனம், செவ்வாய்க்கிழமை காலை 0.80 சதவீதம் உயர்ந்து 555.10 ரூபாயாக இருந்தது. சென்செக்ஸ் 710 புள்ளிகள் உயர்ந்து 57775 புள்ளிகளில் வர்த்தகமாகியது. நேற்றைய பங்கு சந்தை முடிவில் 550.70 ரூபாய்க்கு வர்த்தகமாகியது. கடந்த 52 வாரங்களில் அதிகபட்சமாக 667.50 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 345.20 க்கும் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் பங்குகளின் வர்த்தகம் இருந்தது. சந்தையில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனம் 51.57 சதவீத பங்குகளையும், அந்நிய மற்றும் உள்நாட்டு…

  • உயர்ந்த பிரமல் பங்குகளின் விலை!

    பிரமல் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை இந்திய நேரப்படி 10 .10 மணிக்கு சந்தையில் 3.58 சதவீதம் உயர்ந்து, 2,470 ரூபாயாக இருந்தது. பின்னர் அது விலை அதிகரித்து 2,477.05 ரூபாயாகவும், குறைந்த பட்ச விலையாக 2,368.1 ஆகவும் இருந்தது. முன்தினமான திங்கட்கிழமை பங்குகளின் விலை 2,384.7 ஆக இருந்தது. பங்கு பத்திரங்கள் மூலம் 78.31 சதவீதம் லாபத்தை கடந்த ஒரு வருடமாக பிரமல் பெற்றிருக்கிறது. முடிந்த செப்டம்பர் 30 தேதியில் புரமோட்டர்கள் 43.51 சதவீத பங்குகளையும்,…