பரபரப்பான டேகா இண்டஸ்டிரீஸ் ஐபிஓ


டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓ வெளியீட்டின் இரண்டாம் நாளான இன்று, தனது விற்பனையை 5.31 மடங்கிற்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 8.64 மடங்கிற்கும் பதிவு செய்யப்பட்டது. டேகா, ஒரு பங்கின் விலை ரூ. 443லிருந்து 453 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசமுள்ள 1,36,69,478 பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.

டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓ வெளியீட்டின் இரண்டாம் நாளான இன்று, தனது விற்பனையை 5.31 மடங்கிற்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 8.64 மடங்கிற்கும் பதிவு செய்யப்பட்டது. டேகா இண்டஸ்ட்ரீஸின் 619 கோடி ஐபிஓ, இரண்டாவது நாளான டிசம்பர் 2 ந் தேதி பிற்பகலில் 7.73 முறை சந்தா செலுத்தப்பட்டது.

சில்லறை முதலீட்டாளர்கள் 11.95 மடங்கும், நிறுவனம் சாராத முதலீட்டாளர்கள் 6.81 மடங்குகளிலும் சந்தா செலுத்தினர். தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 7 சதவீத பங்குகளை வாங்கினர். ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில், முதலீட்டாளர்களும், பங்குதாரர்களும் தங்களிடமுள்ள 1,39,69,478 பங்குகளை விற்கவுள்ளனர். ஒரு பங்கின் விலையை 443 ரூபாயில் இருந்து 453 ரூபாய் வரை டேகா நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

டேகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், உலகளாவிய கனிம வளம், சுரங்கம் மற்றும் மொத்த திடப்பொருட்களைக் கையாளும் தொழில் மற்றும் தொடர்ச்சியான நுகர்வு தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆகும். உலகளவில், ஜூன் 2021 நிலவரப்படி வருவாயின் அடிப்படையில் பாலிமர் அடிப்படையிலான மில்-லைனர்களின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *