-
03-01-2022 (திங்கட்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 10 குறைந்து ₹ 4,550 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 10 குறைந்து ₹ 4,964 ஆகவும்
-
மந்தமான நிலையில் பட்டியலான CMS Info Systems பங்குகள் !
இன்று இந்திய பங்குச் சந்தையில் சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் பங்குகள் அறிமுகமாகின. இந்த வருடத்தின் இறுதி ஐபிஓ வெளியீடான இந்த பங்குகளின் ஈக்விட்டி பங்குகள் ‘பி’ குரூப் செக்யூரிட்டிகளின் பட்டியலில் என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கும், ஒப்பந்தங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
-
சி.எம்.எஸ் இன்போ சிஸ்டம்ஸ் – IPO – இன்று துவக்கம் !
துவக்க நாள் : டிசம்பர் – 21முடிவு நாள் : டிசம்பர் – 23சலுகை விலை – ₹ 205 முதல் ₹ 216IPO மதிப்பீடு – ₹ 1,100 கோடிபேஸ் வேல்யூ – ₹ 10 / Per Equity Shareமார்க்கெட் லாட் – 69 / Equity Sharesஅலாட்மென்ட் தேதி – டிசம்பர் 28பட்டியலிடப்படும் தேதி – டிசம்பர் 31 சி.எம்.எஸ் அதன் வணிக பிரிவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் அதில் நன்கு…
-
சர்ச்சில் கேப்பிடல் நிறுவனத்தைக் கைப்பற்றுமா பைஜுஸ் !
இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ், சர்ச்சில் கேபிட்டலை கையகப்படுத்தும் விவாதங்களில் ஈடுபட்டுள்ளது என்று இது குறித்து நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ், இன்னும் பல சாத்தியமான நிறுவனங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜனவரியில் அறிவிப்பு வரலாம் என்றாலும், பேச்சுவார்த்தை இறுதியானது அல்ல என்றும் பைஜூஸ் அல்லது சர்ச்சில் நிறுவனம் அத்தகைய ஒப்பந்தத்திலிருந்து விலகலாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் பைஜூஸ்…
-
மின் வாகனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் !
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ 94,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோலியர்ஸின் இந்தியா மற்றும் இண்டோஸ்பேஸ் கூட்டு அறிக்கை தெரிவிக்கிறது. ‘எலெக்ட்ரிக் மொபிலிட்டி இன் ஃபுல் கியர்’ என்ற அறிக்கையில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன (EV) தொழில் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது, ஆனால் அரசாங்கத்தின் முன்முயற்சிகள் மற்றும் காலநிலை மாற்றத்தை அங்கீகரிப்பதற்கான நகர்வு ஆகியவற்றின் ஆதரவுடன் அது…
-
“நெட்ஃபிளிக்ஸ்” அதிரடி விலை குறைப்பு ! முழு விவரம் !
அமெரிக்க OTT ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இந்தியாவிற்கான புதிய விலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மொபைல் போன் திட்டத்தில் 199 ரூபாயாக இருந்த கட்டணத்தை 149 ரூபாயாக குறைந்துள்ளது. எந்தவொரு சாதனத்திலும் அனைத்து உள்ளடக்கத்தையம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் 199 ரூபாய் மற்றும் 499 ரூபாயாகவும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நான்கு சாதனங்களில் வேலை செய்யும் பிரீமியம் திட்டமானது ₹649 இருக்கிறது. இது மலிவானது. இந்த கட்டண விகிதங்கள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு…
-
2070 – வுக்குள் இந்தியாவில் பூஜ்ய கார்பன் உமிழ்வு – சாத்தியமா?
2070க்குள் இந்தியா கார்பன் பூஜ்ய உமிழ்வை சாத்தியப்படுத்த 10.1 ட்ரில்லியன் டாலர் முதலீடுகள் தேவை என சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் நீர் கவுன்சில்- எரிசக்தி நிதிக்கான மையம் (CEEW-CEF) கூறியிருக்கிறது. இந்தியாவின் ஆற்றல், தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறைகளை டீ – கார்பனேற்றம் செய்து அதன் நிகர பூஜ்ஜிய இலக்கை எட்ட 3.5 ட்ரில்லியன் டாலர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. அந்த ஆய்வு மேலும் குறிப்பிடுகையில் குறிப்பாக இந்தியாவின் மின்…
-
ஏவுகணை வீசும் 30 ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது இந்தியா !
அமெரிக்காவிடம் இருந்து இந்திய ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படை பயன்பாட்டிற்கு பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட 30 தாக்குதல் ரக ட்ரோன்களை வாங்க உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஆளில்லா சிறிய விமானங்களை வாங்குவதற்கான பரிந்துரைக்கு, பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் வழங்க உள்ளது. தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை அந்த ட்ரோன்களிலிருந்து ஏவ முடியும். நடப்பு நிதியாண்டிலேயே இந்த கொள்முதல் நிறைவேற்றப்படும். ராணுவம்,…
-
இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்குத் தடை வருமா? அங்கீகாரம் கிடைக்குமா? திங்களன்று உயர் மட்டக் கூட்டம் !
கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கிரிப்டோகரன்சி குறித்த கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கினார், பல்வேறு பங்குதாரர்களிடையே விரிவான விவாதங்களை ஆய்வு செய்தார்.இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை கிரிப்டோகரன்சி குறித்த தொடர் விவாதங்களை நடத்தி வருகின்றன. கிரிப்டோகரன்சி இந்தியாவில் பெரிய அளவில் முதலீட்டு வழிமுறையாக விரைவாக வளர்ந்து வருகிறது. வருமானத்தை அதிகப்படுத்த விளம்பரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள்…
-
விவசாயிகளை அச்சுறுத்தும் உரத்தட்டுப்பாடு ! மோடி அரசின் இன்னொரு தோல்வி !
குளிர்கால பயிர் நடவுப் பருவத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் விதமாக உரத்தட்டுப்பாடு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது, அடுத்த ஆண்டில் தொடர்ச்சியாக மிக முக்கியமான மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விவகாரம் விவசாயிகளிடையே பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிகிறது. மத்திய மற்றும் வட இந்தியாவின் விவசாயிகள் ஏற்கனவே ஒன்றிய அரசின் மீது நம்பிக்கையிழந்து காணப்படும் சூழலில் மானிய விலையில் உரங்களை விற்கும் அரசு விற்பனை நிலையங்களில் திரண்டிருப்பதும், பல இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த…