ஏவுகணை வீசும் 30 ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது இந்தியா !


அமெரிக்காவிடம் இருந்து இந்திய ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படை பயன்பாட்டிற்கு பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட 30 தாக்குதல் ரக ட்ரோன்களை வாங்க உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஆளில்லா சிறிய விமானங்களை வாங்குவதற்கான பரிந்துரைக்கு, பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் வழங்க உள்ளது. தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை அந்த ட்ரோன்களிலிருந்து ஏவ முடியும்.

நடப்பு நிதியாண்டிலேயே இந்த கொள்முதல் நிறைவேற்றப்படும். ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தலா 10 வீதம் 30 ட்ரோன்கள் வழங்கப்படும். அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ட்ரோன்கள் வானில் தொடர்ச்சியாக 35 மணி நேரம் வரை பறக்கக் கூடியவை. கண்காணிப்பு, உளவறிதல், இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தல் உள்ளிட்ட பணிகளில் அந்த ட்ரோன்களை ஈடுபடுத்த முடியும் என்று தெரிவித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *