-
வங்கி டெபாசிட் முதலீடுகளில் அதிக லாபமடைவது எப்படி?
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகையின் (FDக்கள்) வட்டி விகிதங்களை குறைத்த பிறகும், சில வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி தற்போது உள்ள நிலையைப் பேணியுள்ளது. முடிந்த இரண்டு வாரங்களில் எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணயக் கொள்கை மதிப்பாய்வுக்குப் பிறகு டிசம்பர் 8ம் தேதியன்று ரெப்போ…
-
சேமிப்புக் கணக்குக் கட்டணங்களை உயர்த்தும் இண்டஸ் இண்ட் வங்கி !
ஜனவரி 1ந் தேதி முதல் இண்டஸ் இன்ட் வங்கி தனது சேமிப்பு கணக்கு கட்டணங்களை உயர்த்த உள்ளது. உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்திற்கான கட்டணம் டிசம்பர் 31ந் தேதி வரை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆனாலும் இந்த திருத்தப்பட்ட கட்டணம் உங்கள் வழக்கமான சேமிப்புக் கணக்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. சேமிப்புக் கணக்கை சரிவர பராமரிக்காமல் இருப்பது, ரொக்க வைப்புத் தொகை, பணமின்றி காசோலை திரும்புதல், இலவச வரம்புகளுக்கு மேற்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை…
-
வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி !
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு வட்டி விகிதத்தை குறைந்திருக்கிறது. 10 இலட்சத்திற்கும் குறைவான சேமிப்புக்கு வருடத்திற்கு 2.8 சதவிகித வட்டியும், 10 இலட்சத்திற்கு மேற்பட்ட சேமிப்புக்கு 2.85 சதவிகித வட்டியும் வழங்க இன்றிலிருந்து (டிசம்பர் 1) முடிவு செய்திருப்பதாக வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 2.90 சதவீத வட்டியை வழங்கியது குறிப்பிடத்தக்கது. வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால வரம்பில்…
-
ஏவுகணை வீசும் 30 ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது இந்தியா !
அமெரிக்காவிடம் இருந்து இந்திய ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படை பயன்பாட்டிற்கு பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட 30 தாக்குதல் ரக ட்ரோன்களை வாங்க உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஆளில்லா சிறிய விமானங்களை வாங்குவதற்கான பரிந்துரைக்கு, பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் வழங்க உள்ளது. தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை அந்த ட்ரோன்களிலிருந்து ஏவ முடியும். நடப்பு நிதியாண்டிலேயே இந்த கொள்முதல் நிறைவேற்றப்படும். ராணுவம்,…
-
16-11-2021 (செவ்வாய்க்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 19 அதிகரித்து ₹ 4,626 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 21 அதிகரித்து ₹ 5,073 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹ 0.40 அதிகரித்து 66.80 ஆகவும் வணிகமாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,650.00 ₹ 4,631.00 (+) ₹ 19.00 தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 5,073.00 ₹ 5,052.00…
-
இன்றைய (11-11-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, 22 கேரட் தங்கத்தின் விலை ₹ 4,726 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ₹ 4,809 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹ 1.20 அதிகரித்து 65.90 ஆகவும் வணிகமாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,726.00 ₹ 4,725.00 (+) ₹…
-
11/11/2021 – தொடர்ந்து வீழும் சந்தை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 61 புள்ளிகள் குறைந்து 60,292 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 50 புள்ளிகள் குறைந்து 17,967 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 110 புள்ளிகள் குறைந்து 39,913 ஆக வர்த்தகமானது. நண்பகல் 12 மணி நிலவரம்: BSE Sensex, 400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்து 59,953 ஆகவும், நிஃப்டி 50, 134 புள்ளிகள் வீழ்ந்து 17,883 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு, 347 புள்ளிகள் வீழ்ந்து…
-
பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை – 5 ஆண்டுகள் முடிந்து சாதித்தது என்ன?
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இது எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அறிவிக்கப்பட்டது, இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். இது நிகழ்ந்து நேற்றோடு ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தினை அரசு எடுத்தது என்று கூறப்பட்டது, ஆனால் கருப்பு பணம் எவ்வளவு சிக்கியது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும்…
-
ரிலையன்ஸ் கேப்பிட்டல் சொத்து விற்பனை துவக்கம் ! நீடிக்கும் மந்த நிலை !
ரிலையன்ஸ் கேபிடலின் சொத்துக்கள் விற்பனை அண்மையில் தொடங்கியது, ஆனால் பல்வேறு நீதிமன்றங்களில் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மிக மெதுவாகவே நடைபெற்று வருகிறது, கடன் வாங்கிய ரிலையன்ஸ் கேப்பிடலின் பல்வேறு சொத்துகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குறிப்பாக அதன் இன்ஷூரன்ஸ் வென்ச்சர்ஸ், சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் மற்றும் செக்யூரிட்டி ஆர்ம் ஆகியவை இந்த விற்பனையில் அடங்கும். குறிப்பாக கடன் வழங்குநர்களின் ஆலோசகர்கள் – SBI CAPS மற்றும் J.M. பினான்சியல் நிறுவனங்கள் ரிலையன்ஸ் கேப்பிட்டலின் 9…
-
தீபாவளி நல்வாழ்த்துகள்
மணிபேச்சு.காம் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள், இந்த தீப ஒளித் திருநாள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் சேர்க்கட்டும். பாதுகாப்புடனும், நோய்த்தொற்று விழிப்புணர்வுணர்வோடும் இந்த விழாவைக் கொண்டாடுங்கள்.