ரிலையன்ஸ் கேப்பிட்டல் சொத்து விற்பனை துவக்கம் ! நீடிக்கும் மந்த நிலை !


ரிலையன்ஸ் கேபிடலின் சொத்துக்கள் விற்பனை அண்மையில் தொடங்கியது, ஆனால் பல்வேறு நீதிமன்றங்களில் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மிக மெதுவாகவே நடைபெற்று வருகிறது, கடன் வாங்கிய ரிலையன்ஸ் கேப்பிடலின் பல்வேறு சொத்துகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குறிப்பாக அதன் இன்ஷூரன்ஸ் வென்ச்சர்ஸ், சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் மற்றும் செக்யூரிட்டி ஆர்ம் ஆகியவை இந்த விற்பனையில் அடங்கும்.

குறிப்பாக கடன் வழங்குநர்களின் ஆலோசகர்கள் – SBI CAPS மற்றும் J.M. பினான்சியல் நிறுவனங்கள் ரிலையன்ஸ் கேப்பிட்டலின் 9 சொத்துக்களுக்காக 90க்கும் மேலான விருப்ப விண்ணப்பத்தினை தாக்கல் செய்தன. ரிலையன்ஸ் கேப்பிடல் சொத்துக்களின் விற்பனையானது டிபஞ்சர் ஹோல்டிங்ஸ் மற்றும் டிபஞ்சர் ட்ரஸ்டி விஸ்ட்ரா மற்றும் ஐடிசிஎல் இந்தியா லிமிடெட் மூலமாக முன்னெடுக்கப்பட்டது.

இவைகள்தான் ரிலையன்ஸ் கேப்பிடல் மொத்த கடனில் 93 சதவீத கடனை கையில் வைத்திருக்கும் நிறுவனங்கள் ஆகும். மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் கடன் ரூபாய் 26,887 கோடி ரூபாய் ஆகும், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் தனது கடனை கட்டாததால் இந்த நிறுவனங்கள் சொத்துக்களை பணமாக்குவதற்கான செயல்முறையை தொடங்கினர். ஆனால் மார்ச் 31 2011 நிலவரப்படி அதை முடிக்க முடியவில்லை.

2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையின்படி ரிலையன்ஸ் கேப்பிடலின் ஒருங்கிணைந்த மொத்த சொத்துக்கள் ரூபாய் 64 ,878 கோடி ரூபாயாக இருந்தது. இந்தியாவில் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் கேப்பிடல் அனில் அம்பானியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *