Category: பொருளாதாரம்

  • வெளிநாட்டு முதலீடு அதிகரித்து ரூபாயின் மதிப்பு உயர்வு

    டாலருக்கு எதிரான ரூபாயின்மதிப்பு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் இந்திய சந்தைகளுக்கு வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) திரும்பியதால் உற்சாகமடைந்து, செவ்வாய்கிழமை டாலருக்கு எதிராக ரூபாய் 78.49 ஆக அதிகரித்தது. திங்களன்று எண்ணெய் $ 100-க்கு கீழே சரிந்தது, இது மேலும் குறைந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது பீப்பாய்க்கு சுமார் $99.14 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது, இது ஜூலை 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகக் குறைந்த விலையில் உள்ளது. ஒன்பது…

  • விமான எரி பொருளின் விலை லிட்டருக்கு 126 ரூபாயாக குறைவு

    வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டருக்கான விலை 36 ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை 36 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 ஆயிரத்து 177 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது இரண்டாயிரத்து 141 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த மே மாதம்…

  • விலைவாசி உயர்வு ஒரு வெளித்தோற்றமா? நிதியமைச்சர் சொல்வது என்ன?

    திங்களன்று லோக்சபாவில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் “சரியானவை” என்று அமைச்சர் கூறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த தனது பதிலில், இந்தியப் பொருளாதாரத்தில் தேக்கம் அல்லது மந்தநிலை பற்றிய கவலைகளை நிராகரித்தார். இந்தியாவை பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், இந்த சவாலான காலத்திலும் நாடு சிறந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டினார். விலை உயர்வை எளிதாக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டிய அவர்,…

  • ஜூலை மாதத்தில் ஏற்றம் பெற்ற FPIs

    ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களிடமிருந்து (FPIs) இந்திய பங்குகள் ஜூலை மாதத்தில் ஏற்றம் பெற்றது. சந்தை நிபுணர்கள் கூற்றுப்படி, பலவீனமான அமெரிக்கப் பொருளாதாரம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் பணவியல் இறுக்கத்தின் வேகத்தைக் குறைக்கும் என்றும், அக்டோபரில் விகித உயர்வுகளில் இடைநிறுத்தம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இதனிடையே திங்களன்று டாலர் மூன்று வாரக் குறைந்த அளவிற்குச் சென்றது, கடந்த ஐந்து நாட்களில் ஒரு சதவீத புள்ளி குறைந்தது. என்எஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எஃப்பிஐ, ஜூன் மாதத்துடன்…

  • இந்த மாத வரி வசூல் எவ்வளவு?

    ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 5வது முறையாக ஒரு லட்சத்து 40 அயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை வசூலான ஜிஎஸ்டி வருவாயில் இரண்டாவது அதிகபட்ச தொகையாக, ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் வசூலானதை காட்டிலும், 28 சதவிகிதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக 25…

  • 21% சதவீதமாக அதிகரித்த நிதிப் பற்றாக்குறை

    இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் 21% சதவீதமாக அதிகரித்துள்ளது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. ரூபாய் மதிப்பு சரிவு, மற்றும் கலால் மற்றும் சுங்க வரி குறைப்பு ஆகியவற்றால் அரசாங்கத்தின் மூலதனச் செலவுகள் கடுமையாக அதிகரித்ததே பற்றாக்குறைக்கு காரணம் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன..முதல் காலாண்டில் அரசாங்கத்தின் வருவாய்க்கும் செலவினத்திற்கும் இடையே உள்ள இடைவெளி கடந்த ஆண்டு இதே காலத்தை விட 28% அதிகமாகும் என்று…

  • பருவமழை பற்றாக்குறை; அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை..

    பருவமழையின் நீடித்த இடைவெளி, வட மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் முக்கியமான நெல் விதைப்பு பருவத்தை பாதிக்கக்கூடும் எனவும், மேலும் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. நாடு முழுவதும் மழை பொழிவதில் பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. ஐஎம்டி அறிக்கைகளின்படி, அடுத்த ஒரு வாரத்திற்கு நாடு முழுவதும் பலவீனமான பருவமழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், விதைப்பில் தாமதம் ஏற்படுவதால்,…

  • வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள பெடரல் ரிசர்வ்

    பெடரல் ரிசர்வ் தொடர்ந்து இரண்டாவது மாதமாக 75 அடிப்படை புள்ளிகளால் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இது பொருளாதாரத்திற்கு கடுமையான அடி என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பொருளாதாரத்தை மந்தநிலையில் தள்ளினாலும் கூட, அதிகாரிகள் இப்போது பொருளாதாரத்தை குளிர்விப்பதற்காக வட்டி விகிதங்களை வலுக்கட்டாயமாக உயர்த்துகிறார்கள். இருப்பினும் உயர் விகிதங்கள் ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவுகள் குறிப்பாக வீட்டுச் சந்தையில் தெளிவாகத் தெரியும், அங்கு விற்பனை குறைந்துள்ளது. அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 9.1%…

  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் – IMF

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை, சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏப்ரல் மாதத்தில் 8.2% இல் இருந்து 7.4% ஆகக் குறைத்துள்ளது. உலகளாவிய பொருளாதாரம் இந்த ஆண்டு 3.2% ஆக குறையும், இது ஏப்ரல் மாதத்தில் முன்னறிவிக்கப்பட்ட 3.6% ஐ விட மெதுவாக இருக்கும் என்று IMF தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 7.6% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ள சவுதி அரேபியா மட்டுமே இந்தியாவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும்கூட, IMF இன் இந்தியாவிற்கான வளர்ச்சி கணிப்பு…

  • வங்கியில் பணம் எடுக்க கூடுதல் வரி

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஏற்றுமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு, சாமானிய மக்கள் பயன்படுத்தும் வங்கி சேவைகளுக்கு 18 சதவிதம் சரக்கு மற்றும் சேவை வரியை விதித்துள்ளது. அண்மையில் வெளியான சரக்கு மற்றும் சேவை வரி உயர்வில், பல்வேறு பொருட்கள் மீதான வரியை உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதில், கவனிக்கத்தக்க விஷயம் காசோலை மீதான ஜிஎஸ்டி வரி. அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காசோலை மீதான வரி 18 சதவிதவிதமாக…