உலகச் சந்தைகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது முறையாக வெள்ளிக்கிழமையன்று சரிவில் முடிவடைந்தன, NSE நிஃப்டி குறியீடு 86 புள்ளிகள் குறைந்து 17,532 ஆகவும், BSE சென்செக்ஸ் 360 புள்ளிகள் குறைந்து 58,765 என்ற நிலையிலும் முடிவடைந்தன. NIFTY வங்கிகளின் குறியீடானது 199 புள்ளிகள் குறைந்து 37,225 என்ற அளவில் முடிவடைந்தது. ஐந்து வாரங்களாக உயர்வடைந்து வந்த NIFTY குறியீடு கடந்த வாரத்தில் மட்டும் 1.8 சதவிகித சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.