காப்பீடு – முதலீடு சேர்த்தால் என்ன ஆகும்?


காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யும் போது, அதனுடன் சேர்த்து முதலீட்டு திட்டத்தை சிலர் பரிந்துரை செய்வது தற்போதைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், காப்பீடு என்பது பாதுக்காப்பிற்கு மட்டுமே, அது முதலீடு இல்லை என்பதை, காப்பீட்டு திட்டத்தை எடுக்க முடிவு செய்யும் போதே மனதில் கொள்ள வேண்டும். காப்பீட்டையும், முதலீட்டையும் சேர்த்தால், பெரும்பாலும் அதில் இருந்து வருமானம் என்பது மிக மிக குறைவானதாகவே இருக்கும். அதே சமயம், ஏன் முதலீட்டையும், காப்பீட்டையும் சேர்த்து ஒரே திட்டமாக செய்ய கூடாது என்பதற்கு சில காரணங்களும் உள்ளன.

காப்பீடு மற்றும் சேமிப்பு என்ற வகையில் பெறப்படும் காப்பீட்டு திட்டத்தில், நாம் செலுத்தும் பிரிமியத்தில் ஒரு பகுதி முதலீட்டிற்கு செல்லும், இதனால் முழுமையான காப்பீட்டின் பலன் கிடைக்காது.

இதில் செய்யப்படும் முதலீட்டிற்கு கிடைக்கும் வருமானம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். பல சமயங்களில் நஷ்டம் ஏற்படும் நிலையும் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியே லாபம் வந்தாலும், அது பணவீக்கத்தை கடந்து லாபம் தராது என்பது தான் எதார்த்தமாக உள்ளது.பெரும்பாலும், 3 சதவிதம் அளவிற்கு தான் வருமானம் இருப்பதாக சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

  1. முதலீடு மற்றும் காப்பீடு இரண்டுமே இருக்கிறது என்று கூறி மக்களை கவர்ந்து இழுப்பார்கள். ஆனால், இதனால் பலன் பெறுவது பெரும்பாலும், ஏஜெண்டுகள், அந்த நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தை சார்ந்தவர்கள் தான். பிரிமியம் செலுத்துபவர்களுக்கு பெரியதாய் எந்த பலனும் கிடைப்பது இல்லை.

காப்பீடு செய்ய வேண்டும் என்றால், முற்றிலும் காப்பீடு மட்டுமே கொண்ட திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியம். இதில் சேமிப்பை சேர்த்தால், அதில் வருமானத்தை நாம் எதிர்பார்க்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடல்நலக் காப்பீடு தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் உதவிக்கு எங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.விவரங்களைப் பகிர கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க:
https://forms.gle/GRmsDJiXWZ4NTyBJ6
எங்களை +91 91500 59377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *