SpaceX தொழிலாளர்களின் கடிதம்- எலோன் மஸ்க் நடவடிக்கை


அண்மையில் SpaceX தொழிலாளர்களின் கடிதம், எலோன் மஸ்க் பொது வெளியில் நடந்து கொண்டதைக் கண்டித்துள்ளது. இதனால் நிறுவனம் அந்தப் பணியாளர்களை காரணம் குறிப்பிடாமலேயே பணி நீக்கம் செய்தது.

எலோன் மஸ்க்கின் பணியாளர்கள் அவருக்கு எழுதிய கடிதத்தில் மஸ்க் பொது வெளியில் நடந்து கொண்டதையும், அவருக்கு எதிரான சமீபத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து “எங்களுக்கு அடிக்கடி கவனச்சிதறல் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என்று கடுமையாகச் சாடியது.

மஸ்க், தன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்வதற்காக ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு $250,000 கொடுத்ததாக சில தகவல்கள் அண்மையில் வெளிவந்தன. அவர் குற்றச்சாட்டுக்களை அவர் பொய் என்று மறுத்தார். அத்துடன் மஸ்க், ட்விட்டரை வாங்குவதற்கு $44 பில்லியன் ஏலத்தில் இருக்கிறார்.

டெஸ்லாவுக்கு எதிராக சமீபத்தில் ” தனது சொந்த ஊழியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நச்சு பணியிட கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது” என்று ஒரு வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனால் டெஸ்லா உயர்தர ஊழியர்களை இழக்க நேரிட்டது மற்றும் வழக்குகளைப் பாதுகாப்பதற்கும், மீறல்களுக்கான அபராதத் தொகையைத் தீர்ப்பதற்கும் செலவுகளை ஏற்படுத்தியது என்றும் அது கூறியது.


70 responses to “SpaceX தொழிலாளர்களின் கடிதம்- எலோன் மஸ்க் நடவடிக்கை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *