வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் ஜெட் ஏர்வேஸ்


செவ்வாயன்று ஜெட் ஏர்வேஸ், விமானிகளை பணியமர்த்துவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது.

செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நடப்பு காலாண்டில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை ஜெட் ஏர்வேஸ் பகிர்ந்து கொண்டது.

அதன்படி A320 விமானங்கள் மற்றும் போயிங்கின் 737NG மற்றும் 737Max விமானங்களுக்காக விமானிகளை பணியமர்த்தும் செயல்முறையை செவ்வாயன்று ஜெட் ஏர்வேஸ் தொடங்கியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

மே 20 அன்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனமான டிஜிசிஏவிடமிருந்து ஏர் ஆபரேட்டர் சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படும் விமான நிறுவனம், இன்னும் ஐரோப்பிய விமானத் தயாரிப்பாளரான ஏர்பஸ் அல்லது அமெரிக்க விண்வெளி நிறுவனமான போயிங்கிடம், விமானங்களுக்கு ஆர்டர் செய்யவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *