ஆதாரருடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டுமா?இதோ இப்பொழுது உங்கள் ஏரியா தபால்காரரே உதவிக்கு வருவார்!!


ஆதாரருடன் மொபைல் நம்பரை இணைக்க சிரம படுகிறீர்களா? கொரோனா தொற்று காலத்தில் வெளியே செல்ல தயக்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இப்போது உங்கள் ஏரியா தபால்காரரின் உதவியுடன் உங்கள் வீட்டு வாசலிலே ஆதார் அட்டைகளில் மொபைல் எண்களைப் திருத்திக்கொள்ளலாம்.

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் (India Post Payments Bank) மற்றும் Unique Identification Authority of India (UIDAI) ஒரு ஏற்பாட்டின் கீழ் தபால்காரர்கள் ஆதார் அட்டைதாரர்களின் மொபைல் எண்களைப் திருத்த ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள 650 இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, 1.46 லட்சம் தபால்காரர்கள் மற்றும் Gramin Dak Sevaks (GDS) நெட்வொர்க் மூலமாக இச்சேவையை பெறலாம்.

இந்த சேவை குறைவான மற்றும் வங்கியில்லாத பகுதிகளுக்கு சேவை செய்வதற்கான யோசனையுடன் தொடங்கப்பட்டுள்ளது, மற்றும் டிஜிட்டல் பிளவுகளை (digital divide) கட்டுப்படுத்துகிறது என்று இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜே வெங்கட்ராமு ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

மொபைல் திருத்த சேவையை வழங்குவதோடு, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தனது நெட்வொர்க் மூலம் குழந்தைகளை சேர்க்கும் சேவையை மிக விரைவில் இயக்கும் என்றும் அறியப்படுகிறது.

மார்ச் 31, 2021 வரை, UIDAI இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 128.99 கோடி ஆதார் எண்களை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *