இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் கணிப்பை குறைத்தது IMF! ஏன் இந்த சரிவு?


சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund-IMF), 2021-22 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product-GDP ) வளர்ச்சி விகிதக் கணிப்பை 9.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. முந்தைய கணிப்பில் இது 12.5 சதவீதமாக இருந்தது. தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால்  இந்த நிலைமை என்று IMF கூறியிருக்கிறது.

IMF கூறுகையில் மார்ச்-மே மாதங்களில் கடுமையான இரண்டாவது COVID அலை பாதிப்பு மற்றும் அதிலிருந்து  மெதுவாக நிகழும் மீட்சி காரணமாக இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்புகள் குறைந்திருக்கிறது . மக்கள் பெரும்பாலும் வைரஸால் பாதிக்கப்படும் வரை, நிலையான மீட்பு சாத்தியமில்லை என்று IMF-யின் இவ்வறிக்கை கூறுகிறது. புது கோவிட் அலைகளை சந்தித்த நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மீட்பு என்பது கடுமையான சவாலாக இருக்கும் என்று IMF கூறுகிறது.

எனினும், 2022-23 நிதியாண்டில், இந்தியாவிற்கு 8.5 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறுகிறது; இது ஏப்ரல் மாதத்தில் கணிக்கப்பட்ட 6.9 சதவீதத்தை விட அதிகம். நடப்பு நிதியாண்டிற்கான IMF-யின் கணிப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் 9.5 சதவிகித கணிப்புடன் ஒத்துப் போகிறது, இது முந்தைய 10.5 சதவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டது. உலக வங்கி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை நிதியாண்டில் 8.3 சதவீதமாகக் கணிக்கிறது.

உலகளாவிய பொருளாதார மீட்சி தொடர்கிறது, ஆனால் மேம்பட்ட பொருளாதாரங்களுக்கும் (advanced economies) வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கும் (developing economies) இடையில் ஒரு பெரிய இடைவெளி உள்ளதென்று IMF தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறுகிறார். தொற்றுநோய் பாதிக்கப்பட்ட மேம்பட்ட நாடுகளில் தனிநபர் வருமானம் 2.8 சதவீதம் குறைந்துள்ளதாக IMF மதிப்பிடுகிறது. சீனா போன்ற நாடுகளில் இந்த கணிப்பு 6.3 சதவீதமாக இருக்கிறது.

சில நாடுகளில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது ,  சீனா போன்ற நாடுகளில், இது 11 சதவீதமாக உள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக தடுப்பூசிகள் போடுவது மற்றும் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்புவது போன்ற காரணங்களால்  சில நாடுகளில் மீட்சி வேகமாக நிகழும். ; ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு தொடர் அலைகளால் வீழ்ச்சி என்கிறார் கோபிநாத்.


3 responses to “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் கணிப்பை குறைத்தது IMF! ஏன் இந்த சரிவு?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *