ஜே.ஆர்.டி டாட்டாவின் 117-வது பிறந்த நாளில் “த்ரோபேக்” ஃபோட்டோவை பகிர்ந்த ரத்தன் டாட்டா!


ரத்தன் டாடா ஜே.ஆர்.டி டாட்டாவின் 117-வது பிறந்தநாளில் பழைய நினைவுகள் அடங்கிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த படத்தைப் பகிர்ந்த ரத்தன் டாட் டா, தமது நிறுவனத்தின் புனே ஆலையில் டாட்டா மோட்டார்ஸ் தயாரித்த முதல் காரான டாட்டா எஸ்டேட்டின் (Tata Estate) வெளியீட்டு கொண்டாட்டத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டாவின் இந்த 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, டாட்டா குழும நிறுவனங்களின் தற்போதைய தலைவர் ரத்தன் டாட்டா வியாழக்கிழமை சமூக வலைதளங்களில் தொழிலதிபர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

ஜே.ஆர்.டி டாட்டாவின் இந்த நினைவலைகளை சுமந்த புகைப்படத்தை பகிர்ந்ததுடன், ரத்தன் டாட்டா, அதன் பின்னணியில் உள்ள மறக்க முடியாத கதையையும் பகிர்ந்து கொண்டார். புனே ஆலையில் டாட்டா எஸ்டேட் துவங்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் இருந்த கொண்டாட்ட மனநிலையிலும், சூழ்நிலையிலும் தான் இப்படி ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை வெளியிட்ட ரத்தன் டாட்டா, அதில், “ஜே.ஆர்.டியின் 117-வது பிறந்தநாளில் மற்றொரு நினைவூட்டும் புகைப்படம், இது இன்னொரு நினைவகம். டாட்டா நிறுவனம் ஒரு டாட்டா காரை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஜே.ஆர்.டி டாட்டா கனவு கண்டார். இந்த கனவில் திரு. சுமந்த் மூல்காக்கோர் இணைந்துள்ளார்.

“புனே ஆலையில் டாட்டா எஸ்டேட் துவங்கப்பட்ட கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஜேவின்(ஜே.ஆர்.டியின்) பல கனவுகளில் ஒன்று நனவாகியது”.

View this post on Instagram

A post shared by Ratan Tata (@ratantata)

ரத்தன் டாட்டா பகிர்ந்த இந்த படம் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் சில மணி நேரங்களுக்குள் 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.

ஜே.ஆர்.டி டாட்டா பிரான்சில் பிறந்தார். பறப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால் பைலட் உரிமம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவரே பெற்றார். லண்டனில் கல்வியை முடித்த ஜே.ஆர்.டி டாட்டா பின்னர், ஒரு வருடம் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து அவர் 1932-இல் டாட்டா ஏர்லைன்ஸை உருவாக்கினார். அதுதான் இப்போது ‘ஏர் இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் பயணிகள் கார் உற்பத்தி உலகுக்குள் நுழைவதற்கு டாட்டா மோட்டார்ஸுக்கு உதவிய முதல் கார்களில் ஒன்றுதான் டாட்டா எஸ்டேட். இவர்களின் பிற பிரபலமான கார்கள் டாட்டா சியரா மற்றும் டாட்டா இண்டிகா என்று சொல்லலாம்.

அவர் ஐந்து தசாப்தங்களாக (50 ஆண்டுகளாக) டாடா & சன்ஸ் தலைவராக இருந்தார். அவரது தலைமையின் கீழான, குழு வெற்றியை அடைந்து பெரிய அளவில் உயர்ந்தது. ஜே.ஆர்.டி டாடா நன்கு அறியப்பட்ட தொழிலதிபர் என்பதுடன், டோராப்ஜி டாடா அறக்கட்டளையின்  அறங்காவலராகவும் (trustee) 50 ஆண்டுகள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *