சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது! சவரன் ஒன்றுக்கு…


தங்கத்தையும் நம்ம இந்தியர்களையும் பிரிக்கவே முடியாது. ஆபரணமா அணியிறதுக்கோஇல்ல முதலீடு செய்வதற்கோ இல்ல உங்க கௌரவத்துக்கோ… எப்படி பார்த்தாலும் தங்கம் உதவும். சென்னையில், இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹18 அதிகரித்து, ₹4,386-க்கு விற்பனை செய்யப்படுகிறது; சவரனுக்கு தங்கம் ₹144 அதிகரித்து ₹35,088-க்கு விற்பனையாகிறது. 

ஒரு கிராம் வெள்ளி, ₹67.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ₹67,500-க்கும் விற்பனையாகிறது. தேசிய அளவில், தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம்  இல்லை. சாதாரணமாக, எதனால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது? பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், புவியியல் பதற்றம், நகை சந்தை, வர்த்தகப் போர்கள் போன்ற போல சிலவற்றைக் காரணிகளாக கூறலாம்.

தங்கத்தில் முதலீடு செய்ய இது ஒரு சரியான தருணம் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனெனில், உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை இருக்கிறது. வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வரி  விகிதங்கள், கடைக்கு கடை மாறும் சேதாரம் மற்றும் செய்கூலி போன்றவற்றால் தங்கத்தின் விலையில் சிறு மாற்றங்கள் ஏற்படும். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *