Ola Electric Scooter வாங்கறதுல மும்மரா இருக்கீங்களா? இதோ, வெளியாகும் நாளும், நேரமும்…


ஓலா மின்சார ஸ்கூட்டருக்காக நம்மில் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்  கொண்டிருக்கிறோம். ஓலா அதன் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 15 மதியம் 2 மணி அளவில் www.olaelectric.com எனும் இணையத்தளத்தில் அறிமுகப்படுத்துகிறது. 

இந்த மின்சார ஸ்கூட்டர் Ola நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். மின்சார வாகன சந்தையில், ஓலா ஸ்கூட்டர் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏதர் 450 எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக இறங்குகிறது. சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஆகஸ்ட் 15 அன்றுதான் அறிமுகமாகவுள்ளது.

ஸ்கூட்டரை 499 க்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு தொடங்கிய, முதல் 24 மணி நேரத்தில் 1,000 த்துக்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து ஆர்டர்கள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டின. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் ஓலா 1 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்றது. ஸ்கூட்டரின் விலை 1 லட்சத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா ஸ்கூட்டரை வீட்டிற்கே நேரடியாக வழங்கத் திட்டமிட்டுள்ளது.

ஸ்கூட்டர் 8 வண்ணங்களில் கிடைக்கிறது – வெள்ளை, கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம், அடர் நீலம், இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல். 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஸ்கூட்டர் 75 கிமீ ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *