-
பாலிசி பஸார் முதல் அதானி வில்மார் வரை ! – அக்டோபரில் வெளிவரக்கூடிய ஐபிஓ-களின் பட்டியல் இதோ!
நிறுவனங்கள் தங்களது முதன்மைப் பொதுப் பங்குகளை வெளியிட 2021 ஒரு சிறந்த வருடமாக மாறி வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் இருவருக்கும் முதன்மைப் பொதுப் பங்குகள் வெளியீடு (ஐபிஓ) நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்திருக்கின்றன. 2021 இல் 58 நிறுவனங்களின் ஐபிஓ-கள் ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இன்னும் பல நிறுவனங்கள் தங்களது ஐபிஓ-களை வெளியீடு தயாராகி வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் 23 நிறுவனங்கள் தங்கள் டிராப்ட் சிவப்பு ஹெர்ரிங் ப்ப்ரஸ்பெக்டஸ் (DRHP) முன்வரைவை சந்தை…
-
இன்றைய பங்குச் சந்தை நிலவரம் (05-10-2021 – செவ்வாய்க்கிழமை):
மும்பை பங்குச் சந்தையான BSE சென்செக்ஸ் 21 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி 59,280 புள்ளிகளில் வர்த்தகமாகிறது, தேசிய பங்குச் சந்தையான NSE 17,693 புள்ளிகளுடனும், நிஃப்டி வங்கிக் குறியீடு 134 புள்ளிகள் சரிந்து 37,445 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது.
-
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது முறையாக வீழ்ச்சி !
உலகச் சந்தைகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது முறையாக வெள்ளிக்கிழமையன்று சரிவில் முடிவடைந்தன, NSE நிஃப்டி குறியீடு 86 புள்ளிகள் குறைந்து 17,532 ஆகவும், BSE சென்செக்ஸ் 360 புள்ளிகள் குறைந்து 58,765 என்ற நிலையிலும் முடிவடைந்தன. NIFTY வங்கிகளின் குறியீடானது 199 புள்ளிகள் குறைந்து 37,225 என்ற அளவில் முடிவடைந்தது. ஐந்து வாரங்களாக உயர்வடைந்து வந்த NIFTY குறியீடு கடந்த வாரத்தில் மட்டும் 1.8 சதவிகித சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
$ 135 பில்லியன்களை இழந்த உலகப்பணக்காரர்கள் – திகிலூட்டும் “எவர்கிராண்ட்” நெருக்கடி !
சீன நிறுவனமான எவர்கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பானது 7.2 பில்லியின் டாலர்கள் சரிந்து 198 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இரண்டாவதாக உலகப்பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசானின் ஜெஃப் பெஸாஸ்ன் சொத்துமதிப்பானது 5.6 பில்லியன் டாலர்கள்…
-
தொடங்கியது ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி யின் புதிய பங்கு வெளியீடு!
ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கியது. இன்று தொடங்கி அக்டோபர் 1 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. 3.88 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. 3.88 கோடி பங்குகளில் ஆதித்ய பிர்லா கேப்பிட்டலின் 28.51 லட்சம் பங்குகளும் சன் லைஃபின் 3.6 கோடி பங்குகளும் அடங்கும். இந்தப் பங்குகளின் விலை ₹695-712 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதிகபட்சமாக பங்குகளின் விற்பனை மூலம் ₹2,768.25 கோடியை ஆதித்ய…
-
அறிமுகத்திலேயே அசத்திய சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் -ன் பங்குகள்!
சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் செப்டம்பர் 24 அன்று ரூ. 811.50 க்கு பட்டியலிடப்பட்டது. NSE-ல் தொடக்க விலை ரூ. 811.50 ஆக இருந்த போது, BSE பங்குச்சந்தையில் ரூ. 811.35 ஆக இருந்ததது. செப்டம்பர் 14 முதல் 16 வரை விற்கப்பட்ட ரூ.1,283 கோடி ஐபிஓ அதன் சலுகைக் காலத்தில் 11.47 முறை முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு பங்கிற்கு ரூ. 734 முதல் ரூ. 744 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. பங்குச்சந்தையின் விவரப்படி, சான்செரா இன்ஜினியரிங்…
-
R Systems International Ltd-ன் பை பேக் ஆஃபர் இதோ!
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான R Systems International Ltd பை பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Gandhi Special Tubes Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபிரின் பொழுது ஒரு பங்கின் மதிப்பு 225 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட்…